புதுடெல்லி:பாராளுமன்ற மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் 2,379 பேர், நேபாளத்தில் 1,357 பேர், கத்தாரில் 795 பேர், மலேசியாவில் 380 பேர், குவைத்தில் 342 பேர், பிரிட்டனில் 323 பேர், பஹ்ரைனில் 261 பேர் மற்றும் பாகிஸ்தானில் 246 இந்தியர்களும் சிறைகளில் உள்ளனர்.
மேலும், 43 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 21 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் பொது மன்னிப்பு கேட்பதற்கான உதவிகளை இந்திய தூதரகங்கள் மூலம் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.