Last Updated:
முன்னதாக கங்குலி டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும், பின்னர் கிரிக்கெட் இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA20 லீக்கின் புதிய சீசனுக்காக பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றி காரணமாக அதேபோன்ற லீக் போட்டிகள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் SA20 லீக் 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவது, உள்ளூர் வீரர்களுக்கு ஒரு பெரிய மேடையை வழங்குவது, மற்றும் சர்வதேச டி20 லீக்குகளுக்குப் போட்டியாக மாறுவது இதன் முக்கிய நோக்கங்கள் உள்ளன. இந்த லீக்கின் ஒரு சுவாரசியமான அம்சம் என்னவென்றால், இதில் உள்ள ஆறு அணிகளும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணிகளின் உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை.
உலகின் முன்னணி டி20 வீரர்களில் பலர் இந்த லீக்கில் விளையாடுகின்றனர். இது போட்டியின் தரத்தை உயர்த்துகிறது. ஐபிஎல் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட இந்த லீக், ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு அதிக வருவாயை பெற்றுத் தருகிறது.
இந்த நிலையில் SA20 லீக்கின் புதிய சீசனுக்காக பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சவுரவ் கங்குலி, பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, எந்த ஒரு அணிக்கும் முழுநேரத் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
August 24, 2025 7:04 PM IST


