வெளிநாட்டு கட்டுமான ஊழியர் பணியில் இருந்தபோது, அவரின் தலையில் சுமார் 62 கிலோ எடைகொண்ட எஃகு இரும்பு கம்பி விழுந்து மாண்டார்.
துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையில் நடந்த இந்த சம்பவத்தில், ஊழியருக்கு மேலே பணியில் இருந்த சக ஊழியர் ஒருவர் அந்த எஃகு இரும்பு கம்பியை அகற்றியதாக சொல்லப்பட்டுள்ளது.
2026ல் “ஊழியர்களுக்கு வேலை இல்லை.. சம்பளம் உயராது” – பெரும்பாலான முதலாளிகளின் கருத்து
2024 அக்டோபர் 18 அன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ஊழியரின் தலையில் கடும் காயம் ஏற்பட்டது.
இதனால் 46 வயதான சீன நாட்டை சேர்ந்த ஜான் ஃபுகுய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனை விசாரித்த மரண விசாரணை அதிகாரி பிரெண்டா சுவா, தனது விசாரணை முடிவுகளை வெளியிட்டார்.
அதில், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
62 கிலோ எடைகொண்ட எஃகு இரும்பு கம்பி விழுந்ததில் ஊழியரின் தலை பாதுகாப்பு கவசம் உடைந்தது, சுயநினைவை இழந்த ஊழியர் பின்னர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திரு. ஜான், மண்டை ஓடு முறிவு மற்றும் மூளையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அக்டோபர் 18 அன்று காலை 9.25 மணியளவில் இறந்தார்.
துவாஸ் நெக்ஸஸ் டிரைவில் உள்ள துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலை, தேசிய நீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகத்துக்கு சொந்தமானது.
ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற இந்தியர்.. ICA அதிகாரியின் முன் தகாத செயல் – சிறையில் அடைத்த நீதிமன்றம்

