சிங்கப்பூரில் உள்ள சில வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட நான்கு நாள் அதிரடி சோதனையில் 7 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) இன்று (டிசம்பர் 13) தெரிவித்தது.
சிங்கப்பூரில் சிகரெட் பெட்டிகள் பறிமுதல்: 3 இந்தியர்கள் உட்பட நால்வர் கைது
அவர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் மேலும் அனைவரும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் CNB தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள் (டிச.8) முதல் வியாழக்கிழமைக்கு (டிச.11) வரை நடத்தப்பட்ட மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள் பிடிபட்டனர்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் பிற குற்றங்கள் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜூரோங் வெஸ்ட்க்கு அருகே உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில், 25 வயதுமிக்க ஊழியர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில் திங்கட்கிழமை (டிச.8) கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் மறுநாள் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சிலேத்தர் பகுதியில் உள்ள மற்றொரு தங்கும் விடுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் 23 வயதுடைய ஒருவரும், மேலும் 29 வயதுடைய மற்றொருவர் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டனர்.
அதில் 29 வயதுடைய ஊழியரிடமிருந்து குறைந்த அளவில் ‘ஐஸ்’ வகை போதைப்பொருளும் அதனை பயன்படுத்த பயன்படும் பல்வேறு வகையான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல, சோவா சூ காங் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 4 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக கடந்த நவம்பர் மாத இறுதியில், CNB நடத்திய அதிரடி சோதனையில் 12 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
உட்லண்ட்ஸ் தங்கும் விடுதியில் பிடிபட்ட 12 வெளிநாட்டு ஊழியர்கள்: எதற்காக கைது? – அதிகாரிகள் விளக்கம்

