உட்லேண்ட்ஸில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிடைத்த தகவலில் அடிப்படையில், உட்லேண்ட்ஸ் அவென்யூ 1 அருகே உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் இந்த சோதனை நடவடிக்கை நடந்தது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் 24 முதல் 36 வயதுக்குட்பட்ட 4 வெளிநாட்டினர் கைதாகினர்.
இதில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களுக்காக 32 வயதுடைய வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் போதைப்பொருள் புழங்கியதாகக் கூறப்படும் 24, 30 மற்றும் 36 வயதுடைய மூன்று வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்தும் அவர்கள் வசிக்கும் பகுதியிலும் மொத்தம் 68 கிராம் கஞ்**, 18 கிராம் ஐஸ், 29 யா** மாத்திரைகள் மற்றும் பல்வேறு போதைப்பொருள் பயன்பாட்டு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இரு லாரிகள் மோதல்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு எலும்பு முறிவுகள், சிராய்ப்பு… 21 பேர் பாதிப்பு
TOTO: சிங்கப்பூர் லாட்டரியில் தலா 28 கோடியை தட்டி தூக்கிய 3 பேர்!

