வெளிநாட்டு ஊழியர்களிடம் வேலை அனுமதி புதுப்பிப்புக்காக சட்டவிரோதமாக கட்டணம் (kickbacks) வசூல் செய்த சிங்கப்பூரருக்கு S$90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
WIS ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு குழுத் தலைவரான, 68 வயதுமிக்க லூ கிம் ஹுவாட் என்பவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?
வெளிநாட்டு ஊழியர்களிடம் வேலை அனுமதிக்காக கட்டணம் வசூல்
அந்நிறுவனம், துப்புரவு மற்றும் பராமரிப்பு சேவை நிறுவனமான Weishen இண்டஸ்ட்ரியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டை நிர்வகிக்கிறது.
18 வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து வேலை அனுமதி புதுப்பிப்புக்காக அவர் S$112,400 சட்டவிரோத கட்டணம் வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது.
லூ ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்தும் S$900 முதல் S$7,000 வரை வசூல் செய்துள்ளார் என மனிதவள அமைச்சகம் (MOM) கூறுகிறது.
அவர் மீது மொத்தம் 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, அவற்றில் ஆறு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூர் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின் (EFMA) கீழ் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஒன்பது வெளிநாட்டு ஊழியர்கள் சொந்த நாடு திரும்பினர்
மேலும், சட்டத்தை மீறிய குற்றத்திற்காக S$90,000 அபராதத்துடன் கூடுதலாக, S$42,000 செலுத்தவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு இழப்பீடாக மொத்தம் S$83,050 தொகையை அவர் செலுத்தியதாக MOM தெரிவித்துள்ளது.
அவர்களின் ஒன்பது ஊழியர்கள் சொந்த நாடு திரும்பினர், மீதமுள்ள ஒன்பது பேர் இன்னும் சிங்கப்பூரில் பணிபுரிகின்றனர், இதில் மூன்று பேர் Weishen நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சிலர் குற்றாவளிகள்
லூ தனது திட்டத்தை நிறைவேற்ற நான்கு நபர்களுடன் சதி வேலையில் ஈடுபட்டதாக MOM கூறியது. அவர்கள்:
- லிம் சூங் செங், Weishen நிறுவனத்தின் முன்னாள் தள மேலாளர்
- கபீர் முகமது ஹுமாயுன் மற்றும் ரோபெல் என்ற இரண்டு ஊழியர்கள்
- வங்காளதேசத்தை தளமாகக் கொண்ட வேலைவாய்ப்பு முகவர்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லிம்மின் குற்றம் நிரூபிக்கப்பட்டு S$84,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கபீரின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டம்
வேலை அனுமதி சலுகைக்காக இதுபோன்ற சட்டவிரோத பணம் வசூலித்தால் S$30,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.