வெளிநாட்டு ஊழியர்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த சிங்கப்பூரருக்கு 40 மாதச் சிறைத்தண்டனையும் S$3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின் (EFMA) கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
54 வயதான லியோங் குவாய் டோங் என்ற சிங்கப்பூரர், போலியான நிறுவனங்களை உருவாக்கி வெளிநாட்டினரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை அனுமதிச் சீட்டுகளை வாங்கி தந்துள்ளார்.
அதுபோன்ற செயல்படாத நிறுவனங்களை அமைக்க அவருடன் சேர்ந்து நான்கு சிங்கப்பூரர்கள் சதி வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
லியோங் மீது 66 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, அவற்றில் 22 குற்றச்சாட்டுகளை மட்டும் அவர் ஒப்புக்கொண்டார். மீதமுள்ள 44 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த குற்ற செயல்கள் மூலம் பெற்ற S$105,000 வருமானத்தை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
கட்டுமான தளத்தில் கிரேன் கவிழ்ந்து உடைந்து விபத்து: 37 வயது ஊழியருக்கு அறுவை சிகிச்சை
2019 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட காலத்தில், 12 போலியான நிறுவனங்கள் அமைத்து, அதன் மூலம் 60 வெளிநாட்டினருக்கு வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறாக சிங்கப்பூர் வந்தடையும் வெளிநாட்டினர்கள் எந்த போலி நிறுவனங்களிலும் வேலை செய்யாமல் இருந்துள்ளனர்.
சிங்கப்பூரில் வேலை அனுமதிச் சீட்டுகளைப் பராமரிக்க வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து S$2,000 முதல் S$5,000 வரை மாதாந்திர தொகையாக லியோங் வசூலித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு.. புதுமுகங்களை டார்கெட் செய்யும் கும்பல் – சிக்கிய இருவர் கைது
இந்த வழக்கில் தொடர்புடைய 66 வெளிநாட்டு ஊழியர்களில், 15 பேர் குற்றவாளிகள் என நிரூபணம் செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு ஊழியரின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தொடங்குவதற்கு முன்பே 16 வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேறி சென்றுவிட்டனர்.
இதில் மீதமுள்ள 34 வெளிநாட்டு ஊழியர்கள் கடும் எச்சரிக்கையுடன் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
பங்களாதேஷ் ஊழியரின் பிறப்புறுப்பை கட் செய்த பெண்.. மனைவி இருப்பதை மறைத்து பெண்ணுடன் உறவு