Singapore Jobs: பள்ளி பேருந்துகளை இயக்கும் நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு ஊழியர்களை கூடுதலாக வேலைக்கு எடுப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஓட்டுநர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கு 2026 நவம்பர் மாதம் வரை அந்நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
புதிய TOTO Match டிரா அறிமுகம்: “2 எண்கள் பொருந்தினால் டோட்டோ பரிசு” – முழு தொகுப்பு
ஓட்டுநர் பற்றாக்குறையை சமாளிக்க கல்வி அமைச்சகம் (MOE) எடுத்த இந்த நடவடிக்கை முதலில் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் முடியவடைய இருந்தது. இந்நிலையில், அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலை
2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பற்றி நாம் அப்போது பதிவிட்டு இருந்தோம், அதன்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளுக்கு சேவை வழங்கும் பேருந்து நிறுவனங்கள் கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விண்ணப்பிக்கலாம்.
மேலும் அந்த ஓட்டுநர்களுக்கு இரண்டு வருட ஒர்க் பெர்மிட் (work permits) என்னும் வேலை அனுமதி வழங்கப்படும் என்று MOE தெரிவித்தது.
இதில் ஒரு நிறுவனம் எத்தனை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியும் என்ற எண்ணிக்கையை மனிதவள அமைச்சகம் (MOM) முடிவு செய்கிறது.
42 நிறுவனங்களுக்கு அனுமதி
கடந்த மே மாத நிலவரப்படி, பள்ளி பேருந்துகளை இயக்கும் 42 நிறுவனங்களுக்கு இந்த விதியின் கீழ் அதிக வெளிநாட்டு ஓட்டுநர்களை பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் பள்ளி பேருந்துகளை இயக்கும் பல நிறுவனங்கள் பள்ளிகளுக்கு சேவை வழங்குவதை திடீரென நிறுத்தியதால், கடுமையான ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டது.
மேலும் வேலையை விட்டுச் சென்றவர்களுக்குப் பதிலாக புதிய ஓட்டுநர்களைக் கண்டுபிடிக்க இயலாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Photo: Today

