லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பொருத்தத் தவறும் லாரி உரிமையாளர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொறுத்தத் தவறுதல் அல்லது வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை அங்கீகரிக்கப்படாத வகையில் மாற்றங்களைச் செய்தல் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக S$10,000 அபராதத்தை எதிர்நோக்கலாம்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சோதனை… 4 ஊழியர்கள் கைது
கூடுதலாக பல லாரி உரிமையாளர்கள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தவேண்டும் என்பதை ஊக்குவிக்க உள்துறை அமைச்சகம் (MHA) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தற்போது இருக்கும் அதிகபட்ச அபராதமான S$1,000 இலிருந்து இது 10 மடங்கு அதிகமாகும்.
அதிகபட்சமாக 3,500 கிலோ முதல் 12,000 கிலோ வரை எடை கொண்ட லாரிகளுக்கு இந்த வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்.
லாரிகள் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் செல்லாமல் இருக்க இந்த வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் உறுதி செய்யும்.
TOTO: சிங்கப்பூர் லாட்டரியில் தலா 28 கோடியை தட்டி தூக்கிய 3 பேர்!
2018 ஜனவரி 1க்கு முன் பதிவு செய்யப்பட்ட லாரிகளில், அதிக கனம் கொண்ட லாரிகள் 2026 ஜனவரி 1க்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கட்டாயம் பொறுத்த வேண்டும்,
மேலும் எடை குறைவான லாரிகள் 2026 ஜூலை 1க்குள் அவ்வாறு செய்ய வேண்டும்.
வரும் ஜனவரி 1 க்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயம் பொறுத்த வேண்டிய லாரிகளில், 10 இல் நான்கு மட்டுமே பொறுத்தியுள்ளதாக SPF தெரிவித்துள்ளது.
2018 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கு இன்னும் ஒரு வருடம் அவகாசம் வழங்கப்படும்.

