பீஷானில் உள்ள பிராடெல் சாலையில் (Braddell Road) நடந்த இரு லாரிகள் தொடர்புடைய ஆக மோசமான விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அவை வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்து நேற்று மே 27 மதியம், பீஷான் மேம்பாலம் முன் பார்ட்லி (Bartley) சாலையில் பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களை பதாகைகளுடன் போராட தூண்டி சிக்கிய இருவர்
இதில் மூன்று பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்திய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) அதிகாரிகள், லாரிகளின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிய இரண்டு பேரை மீட்டனர்.
விபத்தில் சிக்கிய மூன்று ஆடவர்கள் – 36 வயது லாரி ஓட்டுநர்; 59 வயதுடைய மற்றொரு ஓட்டுநர்; மற்றும் 48 வயது பயணி ஆகியோர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், 36 வயது ஆடவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
உயிரிழந்த ஓட்டுநர் இந்தியாவை சேர்ந்தவர் என்று சிலர் கருத்து கூறுகின்றனர். ஆனால், அவர் யார் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இன்னும் வெளியாகவில்லை.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது

