வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) பயிற்சி சான்றிதழ்களையும் பயிற்சி ஆவணங்களையும் போலியாக தயாரித்ததற்காக 3 முன்னாள் ஊழியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மோகன் பிரபு, வீராணன் சீமான் மற்றும் முருகையன் செந்தில் ஆகியோர் என்றும் அவர்கள் PSU குளோபல் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தற்போது செயல்படாத PSU குளோபல் பயிற்சி நிறுவனத்தில் அந்த மூன்று முன்னாள் வெளிநாட்டு ஊழியர்களும் பணியாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
WSH-ல் பயிற்சி பெற்றதாக போலியான சான்றிதழ்களை வழங்கியதற்காக அவர்கள் மூவரும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் (WSHA) கீழ் தண்டனை பெற்றுள்ளதாக அமைச்சகம் கூறியது.
சான்றிதழ்களையும் பயிற்சி ஆவணங்களையும் வேண்டுமென்றே அவர்கள் தங்கள் சுயலாப நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பல ஏமாற்று வேலைகளும் அரங்கேறியுள்ளன…
- அவற்றில் குறைந்த கால கட்டத்தில் WSH பயிற்சிகளை நடத்துதல்
- பயிற்சிகளுக்கு வராதவர்களுக்கு தேர்ச்சி உத்தரவாதம் அளித்தல்
- போலியான முறையில் பயிற்சிக்கு வராதவர்களையும் வந்ததாக வருகைப் பதிவேடுகளை உருவாக்குதல்
- பயிற்சியாளர்களின் முடிவுகளை போலியான முறையில் அமைச்சகத்திடம் பதிவு செய்தல் ஆகியவை அடங்கும்.
சிலேத்தர் வெஸ்ட் லிங்கில் வேன் – டிப்பர் லாரி மோதி விபத்து: ஓட்டுநர் பரிதாப மரணம்
மோகன் வழக்கு
PSU குளோபல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த மோகன், பயிற்சியாளர்களுக்கு மோசடி பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.
தனது பெயரில் போலி சான்றிதழ்களை வழங்குவதற்காக வேண்டி தனது கையொப்பத்தின் டிஜிட்டல் நகலையும் அவர் வழங்கியதாகவும் MOM கூறியுள்ளது.
இந்நிலையில், நேற்று மோகனுக்கு 20 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வீரணன் வழக்கு
PSU Global நிறுவனத்தில் பயிற்சி மேலாளராக இருந்த வீரணன், குறுகிய கால WSH பயிற்சிகளை நடத்தி முடிவுகளை மாற்றியமைக்க உதவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இதன் காரணமாக வீரணனுக்கு கடந்த மார்ச் 6 அன்று 16 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முருகையன் வழக்கு
முருகையன் 2019 ஆம் ஆண்டில் PSU Global நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். அப்போது அவர் மோசடி செய்ததாகவும், போலி சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 7 அன்று அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நிறுவனங்களுக்கு தகவல்
வேலையிட பாதுகாப்பு தொடர்பாக உறுதி செய்ய பெறப்பட்ட சான்றிதழ்கள் செல்லுபடியாகாது என்று MOM உறுதிப்படுத்தியுள்ளது.
அதே போல போலியாக சான்றிதழ் பெற்று நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள் குறித்தும் அவர்களின் நிறுவனங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக MOM குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து சென்னை.. பயணியின் உடைமையில் அடையாளமிட்டு அனுப்பிய சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள்