பொதுத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் உள்ளூர் ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து பேசப்பட்டது.
அதாவது ஐந்து அரசியல் கட்சிகள் நேற்று (ஏப்ரல் 27) தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வட்டமேசை கலந்துரையாடலில் ஊழியர்கள் குறித்து பேசினர்.
சிங்கப்பூரில் வேலை என்றாலே பின்னால் செல்லும் ஒரு கூட்டம் – என்னத்த சொல்ல!
அதில் முக்கியமாக பொருளாதாரம், குடிநுழைவு, வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் ஆகியவை குறித்தும் பேசப்பட்டது.
கேள்வி
“சிங்கப்பூரின் பொருளாதாரம் மாற்றத்தை சந்திக்கும்போது, சில ஊழியர்களுக்கு அது பாதகமாக அமையலாம். ஆனால் சிங்கப்பூர் பொருளாதாரம் வெளிநாட்டு ஊழியர்களையே பெரிதும் நம்பியுள்ளது. இந்த இரண்டு சவால்களையும் சமநிலையாக எவ்வாறு கையாள வேண்டும்?” என்று மீடியாகார்ப் அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டது.
அரசியல் கட்சிகளின் பதில்
வேலைகளில் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் கட்சியாக சீர்திருத்த மக்கள் கூட்டணி (PAR) எப்போதும் இருக்கும் என்பதை திரு லிம் குறிப்பிட்டார்.
ஆனால், நாங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புவதாக கூறிய PSP கட்சியின் திரு டேன்; S Pass மற்றும் ஒர்க் பெர்மிட் அனுமதிக்கு விதிக்கப்படுவது போல் EP அனுமதி மீதும் ஓர் அளவுக்கு தீர்வை விதிப்பது குறித்து குறிப்பிட்டார்.
அதே போல் EP வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை (quota) விதிப்பது குறித்தும் அவர் பேசினார்.
அதே போல, சிங்கப்பூர் ஒரு திறந்த சமூகமாக இருக்க வேண்டும் என்பதை RDU எனும் சிவப்புப் புள்ளிக் கட்சியின் ரவி ஃபிலமன் கூறினார்.
Singapore Jobs: இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியுமா?
The post “வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல”… S Pass, ஒர்க் பெர்மிட் போல் EP-க்கும் அது வேண்டும்: அரசியல் கட்சிகளின் ஓபன் டாக் appeared first on Tamil Daily Singapore.