சிங்கப்பூரில் திடீர் பள்ளத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்ற ஓடி உதவிய வெளிநாட்டு ஊழியர்களான 7 தமிழர்களுக்கு மேலும் மேலும் விருதுகளும் அன்பளிப்புகளும் குவிகின்றன.
ஓடி உதவிய ஏழு ஊழியர்களுக்கும் “சமூக உயிர்காப்பாளர்” விருது (Community Lifesaver Award) வழங்கி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கௌரவித்துள்ளது.
வீர தீர செயல் புரிந்த தமிழ்நாட்டு ஊழியர்கள்… நினைவு பரிசு வழங்கி வாழ்த்திய சிங்கப்பூர் அதிபர்!
மரைன் பரேட் குடிமக்கள் ஆலோசனைக் குழு (CCC) நடத்திய ஊழியர்களுக்கான பாராட்டு விழாவில் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர், அங்கு மதிய உணவோடு சேர்த்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
துணிச்சல்
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை, சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகங்களுக்கான இணையமைச்சர் கோ பெய் மிங் (Goh Pei Ming) கலந்து கொண்டு, ஊழியர்களின் தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
மீட்பு பணியில் அவர்களின் துணிச்சலை மட்டுமல்லாமல், அதன் பின்னர் சேதமடைந்த சாலையை பழைய நிலைக்கு கொண்டு வர உதவியதற்காக அவர்களின் கடின உழைப்பையும் அவர் பாராட்டினார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியான மதிய உணவை உண்டு மகிழ்ந்த ஊழியர்கள், சிங்டெல் (Singtel) அன்பளிப்பாக வழங்கிய பரிசுப் பைகளையும் பெற்றனர்.
ஒரு வருட இலவச டேட்டா
ஆபத்தில் உதவிய ஏழு ஊழியர்களுக்கு ஒரு வருட இலவச டேட்டா சேவையை சிங்டெல் அன்பளிப்பாக வழங்கியது.
இதில் அன்லிமிடெட் 5G+ டேட்டா, சர்வதேச நேரடி அழைப்புகளுக்காக (IDD) 1,000 நிமிடங்கள், உள்ளூர் அழைப்புகளுக்கு மாதந்தோறும் 3,000 நிமிடங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், தினசரி அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட பரிசுப் பைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தான் அவர்கள் 7 பேரும் அதிபர் மாளிகை இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்து வாழ்த்து மற்றும் நினைவு பரிசு பெற்றனர்.
அதற்கு முன்னர் அவர்களுக்காக சுமார் $70,000 வெள்ளியை உள்ளூர் தொண்டூழிய அமைப்பு திரட்டியது, அது 7 ஊழியர்களுக்கும் சமமாக பிரித்து கொடுக்கப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகளை படிக்க…
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?
Photo Credit: Mothership

