சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் வேலை அனுமதி (Work permit) ரத்து செய்யப்பட்டு, அவர் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
எட்டோமிடேட் அடங்கிய ‘கேபாட்’ வைத்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வாகன ஓட்டிகள், லாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மீறினால் கூடுதல் குற்றப் புள்ளிகள், அபராதங்கள்
26 வயதான அந்த ஊழியர் கடந்த அக். 21 அன்று பிடிபட்டதாக சுகாதார அமைச்சகமும் (MOH) மற்றும் சுகாதார அறிவியல் ஆணையமும் (HSA) தெரிவித்தன.
மின் சிகரெட்டுக்கு எதிராக சிங்கப்பூர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது நாம் அறிந்தது தான், இது வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
தைவானை சேர்ந்த அந்த ஊழியருடன் சேர்த்து மொத்தம் 6 வெளிநாட்டு ஊழியர்கள் இந்த குற்றத்திற்காக பிடிபட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடி… 2.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல் – 5 பேர் கைது
அவர்கள் நாடு கடத்தப்பட்டனர் அல்லது விரைவில் நாடு கடத்தப்படவுள்ளனர் எனவும் MOH மற்றும் HSA குறிப்பிட்டன.
“சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைவூட்டப்படுகிறது.”
“விதிகளை மீறும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்படலாம் மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்வதற்குத் தடையும் விதிக்கப்படலாம்,” என்று சுகாதார அமைச்சகமும் சுகாதார அறிவியல் ஆணையமும் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி அவசியம் – CDA

