வெளிநாட்டுப் பணிப்பெண் (Maid) மீது இ ச்சைகொண்ட சிங்கப்பூர் ஆடவர் ஒருவர், பணிப்பெண் தன்னுடைய வாழ்க்கையை அழித்ததாக கூறி அவரை கத்தியை கொண்டு கொ*லை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
37 வயதான முகமோத் கைருல்னைம் பின் ரோஸ்லி என்ற அந்த சிங்கப்பூர் ஆடவர் மிரட்டல் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், கைருல்னைம்க்கு நேற்று ஜூன் 16 அன்று 40 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிரா: S$10 மில்லியன் ஜாக்பாட் பரிசு – ஒரே வெற்றி! ஓகோன்னு வாழ்க..!
என்ன நடந்தது?
நீதிமன்ற ஆவணங்களின்படி, பணிப்பெண் அவரது வீட்டில் 3 மாதங்களாக வேலை செய்வதாகவும், அதிலிருந்து அவர் மீது காதல் உணர்வுகளை கைருல்னைம் வளர்த்துக் கொண்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பணிப்பெண்ணிடமும் தனது உணர்வுகளை அவர் கூறியுள்ளார், ஆனால் அதை பணிப்பெண் வெறுத்ததாக கூறப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் நடுப்பகுதியில், கைருல்னைமை பிடிக்கவில்லை என்று பணிப்பெண் கூறியதாகவும், மேலும் இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தனது சமூக ஊடகங்களிலிருந்தும் ஆடவரை ப்ளோக் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துவாஸ் துறைமுகத்தில் (Tuas Port) விழுந்த புதிய கிரேன் – காணொளி
அதோடு விடாத கைருல்நைம், தனது மனைவியிடமும் தனது காதல் உணர்வுகளைப் பற்றி பேசி, விவாகரத்து பெற அடித்தளம் போட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அவரின் திட்டம் எதுவும் நடக்கவில்லை என்ற விரக்தியில் பணிப்பெண் மற்றும் மனைவி இருவர் மீதும் கைருல்னைம் கோபத்தை காட்டியதாக கூறப்படுகிறது.
பணிப்பெண் தன்னுடைய வாழ்க்கையை அழித்ததாக உணர்ந்த கைருல்னைம், பணிப்பெண் கணவரிடம் “உங்கள் மனைவிக்கு பாகிஸ்தானில் ஒரு காதலன் இருக்கிறான்” என்று சொல்லி அவர்களின் வாழ்க்கையை அழிக்கவும் திட்டம் தீட்டினார்.
அதுவும் நடக்காத பட்சத்தில், மனைவி இல்லாத நேர்தத்தில் கத்தியை எடுத்த கைருல்னைம், கூர்மையான பகுதியை வைத்து பணிப்பெண்ணை நோக்கி நீட்டியபடி மிரட்டியுள்ளார்.
ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு அவரின் மனைவி வீட்டுக்கு வந்ததை அடுத்து, பணிப்பெண் தனது பாதுகாப்புக்காக வேண்டி பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார்.
இந்நிலையில் பணிப்பெண் கண்ணீர் வடிப்பதை கண்ட பொதுமக்களில் ஒருவர், காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
பின்னர் கைருல்னைம் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் 2026 பொது விடுமுறை நாட்கள் – ஊழியர்களுக்கு MOM வெளியிட்ட முக்கிய குறிப்பு

