வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வந்த பணிப்பெண்ணை கத்தரிக்கோல் மற்றும் நகவெட்டி கொண்டு தாக்கியதாக 68 வயதுமிக்க பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் பணிப்பெண்ணுக்கு பல காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பணிப்பெண்ணுக்கு தொல்லை தந்ததாக லிம் லே சூ என்ற அந்த பெண் மீது நேற்று ஆகஸ்ட் 13 அன்று குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி, புக்கிட் பாத்தோக் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணுக்கு அவர் தொல்லை கொடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பணிப்பெண்ணின் கையில் கத்தரிக்கோல் மற்றும் நகம் வெட்டும் கருவியைப் பயன்படுத்தி தாக்கியதாகவும் லிம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் பணிப்பெண்ணுக்கு வலது கையில் ஏழு கீறல்கள், சிராய்ப்பு மற்றும் ரத்த கட்டு காயம் இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அந்த பெண் வரும் செப்டம்பர் 24 அன்று தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டம் தெரிந்துகொள்ளுங்கள்
வீட்டுப் பணிப்பெண்ணைத் தாக்கிய குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு… புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது

