மியான்மரில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 55க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன எல்லைக்கு மிக அருகில், மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள நாம்காம் நகரின் கவுங்டப் கிராமத்தில் இன்று நண்பகலில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள ஒரு கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுரங்கப் பணிகளுக்கான வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறின.
ஆண்கள்,பெண்கள் என பலர் பலி
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த வெடிவிபத்தின் தாக்கத்தால் பலத்த சேதமடைந்துள்ளன.25 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், காயமடைந்த சுமார் 74 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த வெடிவிபத்து நிகழ்ந்த பகுதி சீன எல்லையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தற்பொழுது இப்பகுதி மியான்மர் மத்திய அரசுக்கு எதிராகப் போரிட்டு வரும் தாங் தேசிய விடுதலை இராணுவம் என்ற பழங்குடியின ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

