நைஜீரியாவில் காதலனை பழி தீர்க்கும் முயற்சியில் காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண்,காதலை முறித்துக் கொண்ட காதலனை பழி தீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
விசாரணையில் வெளியான உண்மை
இதனையறியாத காதலன் மிளகு சூப்பினை அவரது நண்பர்களுடன் பகிர்ந்து அருந்திய நிலையில் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மரணங்கள் உணவு ஒவ்வாமை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

