Last Updated:
வெளிநாட்டு பயணங்களுக்காக பிரத்யேகமாக பலன்களை வழங்கும் கிரெடிட் கார்டுகள் மூலமாக பணத்தை சேமித்து, அதே சமயத்தில் ரிவார்டுகள் மற்றும் டிஸ்கவுண்டுகளையும் பெறலாம்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செல்வது ஆர்வமூட்டும் ஒன்றாக இருந்தாலும் பணத்தை நிர்வகிப்பது உங்களுக்கு சவாலான ஒன்றாக அமையலாம். வெளிநாடுகளில் பணத்தை கையாளுவதற்கான புத்திசாலித்தனமான மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஒன்று கிரெடிட் கார்டை பயன்படுத்துவது.
வெளிநாட்டு பயணங்களுக்காக பிரத்யேகமாக பலன்களை வழங்கும் கிரெடிட் கார்டுகள் மூலமாக பணத்தை சேமித்து, அதே சமயத்தில் ரிவார்டுகள் மற்றும் டிஸ்கவுண்டுகளையும் பெறலாம். பல கிரெடிட் கார்டு வழங்குநர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கான ஹோட்டல் புக்கிங், ஷாப்பிங் மற்றும் விமான டிக்கெட் போன்றவற்றிற்கு அட்டகாசமான டீல்கள், ரிவார்டு பாயிண்டுகள் மற்றும் பெரிய டிஸ்கவுண்டுகளை வழங்குகின்றன.
வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் உதாரணமாக விசா, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்றவை உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே, உங்களிடம் குறைவான பணம் இருந்தால் போதுமானது. இதனால் திருட்டு ஏற்படுவதற்கான அபாயமும் குறையும். உங்கள் நாட்டு பணத்தை வெளிநாட்டு பணமாக மாற்றுவதில் இருக்கும் சவால்களை நீங்கள் சந்திக்க தேவையில்லை.
கிரெடிட் கார்டுகள் மூலமாக பணப்பரிமாற்றம் செய்வது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஏனெனில் வெளிநாட்டு டிரான்ஸாக்ஷன்கள் செய்யும்போது உங்களுக்கு கேஷ்பேக், ரிவார்டுகள் போன்றவை வழங்கப்படும். ஆகையால், உங்களுடைய கிரெடிட் கார்டை வெளிநாடுகளில் பயன்படுத்தினால் கூடுதல் சலுகைகள் கிடைக்குமா என்பது குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில சமயங்களில் விமான நிலைய ஸ்டோர்களில் கிரெடிட் கார்டுகளுக்கு சிறந்த பணப்பரிமாற்ற விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
பல கிரெடிட் கார்டுகள் ஏர் மைல்கள், கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகள் போன்ற பயணம் சம்பந்தமாக குறிப்பிட்ட சில பலன்களை வழங்குகின்றன. பயணத்திற்கு புக்கிங் செய்வது, வெளிநாடுகளில் டைனிங், ஷாப்பிங் போன்றவை செய்யும்போது உங்களுடைய கார்டை பயன்படுத்துவதன் மூலமாக அதிக ரிவார்டு பாயிண்டுகளை பெறலாம். மேலும், வெளிநாட்டு டிரான்சாக்ஷன்களுக்கு சில கார்டுகள் கூடுதல் போனஸ் பாயிண்டுகளையும் வழங்குகின்றன.
உங்களுடைய கிரெடிட் கார்டு பயணத்திற்கு ஏற்ற நன்மைகளை வழங்கும் ஒன்று என்றால், உங்களுக்கு பயண காப்பீடு மற்றும் உதவி போன்ற நன்மைகள் கட்டாயமாக வழங்கப்படும். எனவே, பயணம் ரத்து செய்யப்படுவது, தாமதமாவது அல்லது தடங்கல்கள் ஏற்படுவது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு காப்பீடு வழங்கப்படும். லக்கேஜ் காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது மருத்துவ ரீதியான அவசரங்களுக்கு ஒரு சில கிரெடிட் கார்டுகள் காப்பீட்டை வழங்குகின்றன.
உங்களுடைய கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ மற்றும் ஏதேனும் அதிகாரப்பூர்வமற்ற அல்லது மோசடி டிரான்சாக்ஷன் கார்டை பயன்படுத்தி செய்யப்பட்டு இருந்தாலோ அதற்கான கட்டணங்களை நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள தேவையில்லை. மேலும், ஆன்லைன் டிரான்ஸாக்ஷன்கள் செய்வதற்கு பல கிரெடிட் கார்டுகள் ஒன் டைம் பாஸ்வேர்டை (OTP) கேட்கின்றன மற்றும் ஒரு சில பேஸ் ரெகக்னிஷன் போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையோடு வடிவமைக்கப்பட்டுள்ளன.
July 12, 2025 5:22 PM IST
வெளிநாடு போகும்போது கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா…? இந்த பெனிஃபிட்ஸ் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும்…!