இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டு பயணம் என்பது எளிதான ஒன்றாக இருந்தாலும் 70-களில் அது எவ்வளவு கடினமானதாகவும் சுவாரசியமானதாகவும் இருந்தது என்பதை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நவீன தொழில்நுட்பக் காலகட்டத்தில் வெளிநாடுகளில் செய்திதாள் பயன்பாடும் வாசிப்பும் குறைந்து வந்தாலும் இந்தியாவில் அது சிறப்பான நிலையிலேயே உள்ளது. இந்தியாவில் 1780-ஆண்டு அயர்லாந்து நாட்டை சேர்ந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கிஸ் என்பவரால் முதல் செய்திதாள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் செய்திதாள்கள் நாளிதழ்களாவும், வார இதழ்களாகவும், மாத இதழ்களாகவும் வெளிவர தொடங்கின.
தற்போதைய காலகட்டத்தில் செய்தி தாள்களில் பெரும்பாலும் பல்வேறு வகைப்பட்ட செய்திகளும் விளம்பரங்களும் இரங்கல் செய்திகளும் வெளியிடப்பட்டு வரும் நிலையில் 70-களில் ஒருவர் வெளிநாடு சென்று வந்த செய்தி வெளியாகி அதற்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எக்ஸ் பயனாளர் ஒருவர் அவரது எக்ஸ் பக்கத்தில், 70-களில் வெளியான விளம்பரம் ஒன்றில் வெளிநாடு பயணம் செய்த நபரை வாழ்த்தி செய்தி வெளியாகியுள்ளது என்ற கேப்சனுடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவும் புகைப்படமும் வைரலாகி வரும் நிலையில் அந்த பதிவின் கீழ் நெட்டிசன்கள் பலரும் அவர்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர், “இப்போது விசாவிற்கு விண்ணப்பிக்க பல தரவுகள் தேவைப்படுவது போல அப்போது அவர்களுக்கு செய்தித்தாள் விளம்பரம் கட்டாயம் போலும்” எனக் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மற்றொருவரோ, “கடந்த் அரை நூற்றாண்டில் நாம் பலவற்றை கடந்துவிட்டோம்.”எனப் பதிவிட்டுள்ளார். மற்றுமொருவர் அதில் உள்ள கடினங்களை குறித்து அவருடைய கருத்துகளை தெரிவித்துள்ளார். “உங்களுக்கு தெரியாது. பாஸ்போர்ட் பெறுவதற்கான தொலைபேசி அழைப்பை தவிர வெளிநாடு செல்வதற்கான விசா, டிக்கெட்டுகளை பெறுவது என்பது ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவதை போன்றது.” எனக் கூறியுள்ளார்.
In the 70s ads were put in newspapers congratulating Indians who would be travelling abroad pic.twitter.com/O7Ekz16Lxy
— Backpacking Daku (@outofofficedaku) April 9, 2024
கோஹினூர் ரோலிங் ஷட்டர்ஸ் & இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பிரஹல்லாதா ஷெட்டி, இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வணிகப் பயணமாகச் சென்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகஅந்த விளம்பரம் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
