Last Updated:
நாமக்கல்லிலிருந்து முட்டைகள் ஓமன், மாலத்தீவு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முட்டை நகரம் நகரம் என்றழைக்கப்படும் நாமக்கல் மாவட்டம் இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் சுமார் 95% பங்கு வகிக்கிறது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் 1300 கோழிப்பண்ணைகளில் 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன.
இவற்றின் மூலம் தினசரி 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காகத் தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
நாமக்கல்லிலிருந்து முட்டைகள் ஓமன், மாலத்தீவு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல்லிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்குச் சில விதிமுறைகள் உள்ளது.
வெளிநாட்டுக்கு முட்டைகள் (eggs) ஏற்றுமதி செய்ய அரசாங்க ஒப்புதல், சரியான தரச்சான்றிதழ்கள் மற்றும் விலங்குகளின் நலனுக்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல முக்கியமான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஏற்றுமதி உரிமம் மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும். முட்டைகளுக்கு தரச்சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
பேக்கிங் மற்றும் லேபிளிங் கட்டாயம் பண்ணிருக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட வசதி மூலமே கப்பல்களில் ஏற்றுமதி செய்ய வேண்டும். ISO 22000 / HACCP மாதிரியான உணவுப் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
கோழி பண்ணைகளில் நோய் தடுப்பு, தூய்மை, தடுப்பு மருந்து போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவற்றை எல்லாம் பின்பற்றியே நாமக்கல்லிலிருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
Namakkal,Tamil Nadu

