வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு 369 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.
நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலானமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிவெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி சேர்த்த174 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள்குவித்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணியானது 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71, மேட்ஹென்றி 42, டாம் பிளண்டடெல் 33 ரன்கள் சேர்த்தனர்.
நியூஸிலாந்து அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 8 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 0, மார்னஷ் லபுஷேன் 5 ரன்களில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா 5, நேதன் லயன்6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 51.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நேதன் லயன் 41, உஸ்மான் கவாஜா 28, கேமரூன் கிரீன் 34,டிராவிஸ் ஹெட் 29, மிட்செல் மார்ஷ் 0, அலெக்ஸ் கேரி 3, மிட்செல் ஸ்டார்க் 12, பாட் கம்மின்ஸ் 8 ரன்களில் வெளியேறினர். நியூஸிலாந்து அணி தரப்பில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி 3, டிம் சவுதி 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
ரச்சின் ரவீந்திரா அரைசதம்: இதையடுத்து 369 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 8, வில் யங் 15, கேன் வில்லியம்சன் 9 ரன்களில் நடையை கட்டினர். தனது முதல் அரை சதத்தை கடந்த ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 56 ரன்களும் டேரில் மிட்செல் 12 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 258 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று 4-வது ஆட்டத்தை எதிர்கொள்கிறது நியூஸிலாந்து அணி.