சீன நாட்டவர்கள் குழுவொன்றின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை காவல்நிலைய பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வேயங்கொடை பகுதியில் வைத்து இந்த அதிகாரி கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்ட 19 சீன நாட்டவர்களின் கடவுச்சீட்டுகளை இந்த பொறுப்பதிகாரி சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்ததோடு, அவற்றை விடுவிப்பதற்காக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இடைத்தரகராகச் செயல்பட்ட பெண்
இடைத்தரகராகச் செயல்பட்ட பெண் ஒருவர் மூலமாகவே இந்த அதிகாரி குறிப்பிட்ட தொகையைக் கோரியுள்ளார் என்பது காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகப் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது அந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

