• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வெற்றியை தொடரும் முனைப்பில் டெல்லி: மும்பை இந்தியன்ஸுடன் இன்று மோதல் | will Delhi Capitals continue winning streak to play Mumbai Indians today ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
வெற்றியை தொடரும் முனைப்பில் டெல்லி: மும்பை இந்தியன்ஸுடன் இன்று மோதல் | will Delhi Capitals continue winning streak to play Mumbai Indians today ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடத்​தில் உள்ள டெல்லி கேப்​பிடல்​ஸ், 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி அனைத்​தி​லும் வெற்றி பெற்று 8 புள்​ளி​களு​டன் பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளது. நடப்பு சீசனில் தோல்​வியை சந்​திக்​காத ஒரே அணி​யாக டெல்லி கேப்​பிடல்ஸ் வலம் வரு​கிறது. டெல்லி அணி நடப்பு சீசனில் முதன்​முறை​யாக சொந்த மைதானத்​தில் விளை​யாட உள்​ளது. அந்த அணி 4 ஆட்​டங்​களில் இரண்டை 2-வது சொந்த மைதான​மான விசாகப்​பட்​டினத்​தில் விளை​யாடி இருந்​தது.

5 முறை சாம்​பிய​னான ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் தடு​மாறி வரு​கிறது. அந்த அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 8-வது இடத்​தில் உள்​ளது. கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்​திருந்த மும்பை அணி நடப்பு சீசனிலும் மோச​மாக செயல்​பட்டு வரு​கிறது. ரோஹித் சர்​மா​வின் பார்​மும் அணி​யின் பலவீனத்தை அதி​கரிப்​ப​தாக உள்​ளது. 4 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அவர், 38 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார்.

இன்​றைய ஆட்​டத்​தில் அவருக்கு சுழற்​பந்து வீச்​சாளர்​களான குல்​தீப் யாதவ், விப்​ராஜ் நிகாம், அக்​சர் படேல் ஆகியோர் நெருக்​கடி கொடுக்​கக்​கூடும். ரிஸ்ட் ஸ்பின்​ன​ரான குல்​தீப் யாதவ் நடப்பு தொடரில் 8 விக்​கெட்​களை வீழ்த்தி உள்​ளார். மேலும் அனைத்து ஆட்​டங்​களி​லும் 4 ஓவர்​களை முழு​மை​யாக பூர்த்தி செய்​துள்ள அவர், ஓவருக்கு சராசரி​யாக 6 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​துள்​ளார். அதேவேளை​யில் சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான விப்​ராஜ் நிகாம் 5 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யுள்​ளார். அக்​சர் படேல் பந்து வீச்​சில் முழு​மை​யாக செயல்​ப​டாத நிலை​யில் விக்​கெட் ஏதும் கைப்​பற்​ற​வில்​லை.

ரோஹித் சர்​மா, இடதுகை சுழற்​பந்து வீச்சு மற்​றும் ரிஸ்ட் ஸ்பின்​ன​ருக்கு எதி​ராக பெரிய அளவில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்​டது இல்​லை. இதனால் இவர்​களை தொடக்க ஓவர்​களை வீசும் திட்​டத்தை டெல்லி கேப்​பிடல்ஸ் மேற்​கொள்​ளக்​கூடும். திலக் வர்​மா, சூர்​யகு​மார் யாதவ் ஆகியோரது பேட்​டிங்​கும் சீரான​தாக இல்​லை. ஒரு சில ஆட்​டங்​களில் இவர்​கள் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு ரன்​களை வேட்​டை​யாடிய போதி​லும் அது வெற்​றிக்கு உதவ​வில்​லை.

காயத்​தில் இருந்து மீண்டு திரும்பி உள்ள வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்​ரா, கடந்த ஆட்​டத்​தில் 4 ஓவர்​களை வீசி 29 ரன்​களை வழங்​கிய நிலை​யில் விக்​கெட் ஏதும் கைப்​பற்​ற​வில்​லை. இன்​றைய ஆட்​டத்​தில் அவர், தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறனை வெளிப்​படுத்த முயற்​சிக்​கக்​கூடும். முக்​கிய​மாக கே.எல்​.​ராகுலுக்கு அவர், கடும் சவால் அளிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. டெல்லி அணி கடைசி​யாக பெற்ற 2 வெற்​றிகளி​லும் கே.எல்​.​ராகுல் முக்​கிய பங்​கு​வகித்​திருந்​தார். சிஎஸ்​கேவுக்கு எதி​ராக 77 ரன்​கள் விளாசிய அவர், ஆர்​சிபிக்​கு எதி​ராக 93 ரன்​களை விளாசி மிரட்​டி​யிருந்​தார்​.



Read More

Previous Post

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; இந்தியா, தஜிகிஸ்தானிலும் தாக்கம்! | within an hour 4 earthquakes jolt India, other Asian countries 

Next Post

கடனுக்கான EMI கட்டத் தவறினால் என்னாகும் தெரியுமா? சட்டம் சொல்வது என்ன?

Next Post
கடனுக்கான EMI கட்டத் தவறினால் என்னாகும் தெரியுமா? சட்டம் சொல்வது என்ன?

கடனுக்கான EMI கட்டத் தவறினால் என்னாகும் தெரியுமா? சட்டம் சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin