உலகக் கோப்பை தொடரில் கனடா அணியை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் கனடா அணியை இன்று எதிர்கொள்கிறது.
புளோரிடாவில் உள் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஏற்கெனவே முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று சூப்பர் எயிட் சுற்றை உறுதி செய்துள்ளது. வெற்றியைத் தொடரும், வேட்கையுடன் இந்திய அணி களமிறங்குகிறது. கனடா அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
போட்டி நடைபெறவுள்ள புளோரிடாவில் இன்று மழை பெய்ய 85 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க – டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் விளையாடும் இந்தியா உள்ளிட்ட அணிகள் எவை? அட்டவணை இதோ
இதே மைதானத்தில் நேற்று அமெரிக்கா, அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் ஏ பிரிவில் இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்க அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இதையும் படிங்க – இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டது ஏன்? ஐசிசியின் புதிய விதி இதுதான்
தற்போது வரை ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, பி பிரிவில் ஆஸ்திரேலியாவும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீசும், டி பிரிவில் தென்னாப்பிரிக்காவும் தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் பி மற்றும் டி பிரிவில் இன்னும் 2 அணிகள் தகுதி பெற வேண்டியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)