Last Updated:
2-ஆவது ஆறுதல் வெற்றி பெற நியூசிலாந்து அணி கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5 ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த மேட்ச்சில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் இந்திய அணி நிறைவு செய்யுமா என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், டி20 தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தொடரை இழந்த நிலையில் 2வது ஆறுதல் வெற்றி பெற நியூஸிலாந்தும், வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய இந்தியாவும் முயற்சிக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
தற்போது டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இன்றைய மேட்ச்சில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் –
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா
நியூசிலாந்து அணியில் விளையாடும் வீரர்கள் – டிம் சீஃபர்ட்(விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், பெவன் ஜேக்கப்ஸ், மிட்செல் சான்ட்னர்(கேப்டன்), கைல் ஜேமிசன், இஷ் சோதி, லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி


