• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெறும் 40 பைசாவில் 10 லட்ச ரூபாய் காப்பீடு… ரயில் பயண இன்சூரன்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
வெறும் 40 பைசாவில் 10 லட்ச ரூபாய் காப்பீடு… ரயில் பயண இன்சூரன்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரயில் விபத்துகள் புதிதல்ல. அன்றாடம் ஒரு சில ரயில் விபத்துகளை பற்றி கேள்விப்படுகிறோம் அல்லது அவற்றை நேரடியாக காண வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். மே 19 அன்று நடந்த ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வில் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த 3 பயணிகளின் மீது இரும்பு தூண் விழுந்து காயம் அடைந்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் அருகே உள்ள ஊர்குரா ரயில் நிலையத்தை கடந்த போது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் டெர்மினஸுக்கு ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது காலை 9:30 மணி அளவில் இந்த நிகழ்வு நடைபெற்றதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது போன்ற நிகழ்வுகள் ரயில் பயண இன்சூரன்ஸ் எடுப்பதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ரயில் பயணிகள் துரதிஷ்டவசமாக இறந்து போகும் பட்சத்திலோ அல்லது காயமடையும் சமயத்திலோ பயன்படுத்தக்கூடிய இந்த வசதியை இந்திய ரயில்வே துறை அதன் பயணிகளுக்கு வழங்குகிறது.

விளம்பரம்

டிக்கெட் வாங்கும் பொழுது இன்சூரன்ஸ் எடுத்த பயணிகள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்சூரன்ஸுக்கான பிரீமியம் தொகை வெறும் 45 பைசா மட்டுமே. ஆனால் இது 10 லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கக் கூடியதாக அமைகிறது. ஆனால் பெரும்பாலான பயணிகளுக்கு இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

ரயில் பயண இன்சூரன்ஸ் என்பது ஆன்லைனில் ரயில் டிக்கெட் விலை பதிவு செய்யும் பயணிகளுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. கவுண்டரில் இருந்து டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகள் அல்லது ஜெனரல் காம்பார்ட்மெண்டில் பயணிக்கும் பயணிகள் இந்த இன்சூரன்ஸை பயன்படுத்திக் கொள்ள முடியாது. இந்த இன்சூரன்ஸ் பெறுவது உங்களுடைய சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது.

விளம்பரம்

ரயில் பயண இன்சூரன்ஸ் வைத்திருக்கும் ஒரு நபர் எதிர்பாராத விதமாக ரயில் விபத்தில் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் அதற்கான பொருளாதார இழப்பை இன்சூரன்ஸ் நிறுவனம் ஈடு செய்யும். ரயில்வே விபத்து காரணமாக இறப்பு அல்லது உடல் முழுவதுமாக செயலிழந்து போகும் பட்சத்தில் 10 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் தொகை அளிக்கப்படுகிறது. பயணிக்கு நிரந்தர பகுதியளவு செயலிழப்பு ஏற்பட்டால் அவருக்கு 7.5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகை கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பயணி காயமடையும் பொழுது அவருக்கான சிகிச்சை செலவாக 2 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

Also Read | 
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!

ரயில் பயண இன்சூரன்ஸை பெறுவது எப்படி?

ரயில் பயண இன்சூரன்ஸ் பெறுவதற்கு பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் பொழுது அதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். நீங்கள் எந்த வகுப்பில் பயணிக்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல் தாராளமாக இன்சூரன்ஸ் எடுக்கலாம். இந்த இன்சூரன்ஸுகாக உங்களிடமிருந்து வெறும் 45 பைசா மட்டுமே வசூலிக்கப்படும். இன்சூரன்ஸ் ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்த பிறகு பயணியின் இமெயில் மற்றும் மொபைல் நம்பருக்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்படும். அதில் நாமினி விவரங்கள் உட்பட பல்வேறு விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசியில் நாமினில் கொண்டிருப்பது உங்களுடைய இன்சூரன்ஸ் கிளைமை எளிதாக்க உதவும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

“நான் மிகவும் ‘நெர்வஸ்’ ஆக இருந்தேன்” – நினைவலை பகிர்ந்த விராட் கோலி | I was very ‘nervous’: Virat Kohli opens up

Next Post

KKB இடைத்தேர்தலில் மாமன்னரின் புகைப்படம்: குற்றத்தை மறுத்து விசாரணை கோரிய ராமசாமி | Makkal Osai

Next Post
KKB இடைத்தேர்தலில் மாமன்னரின் புகைப்படம்: குற்றத்தை மறுத்து விசாரணை கோரிய ராமசாமி | Makkal Osai

KKB இடைத்தேர்தலில் மாமன்னரின் புகைப்படம்: குற்றத்தை மறுத்து விசாரணை கோரிய ராமசாமி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin