டாட்டாவின் புதிய இ-பைக்கின் சிறப்பம்சம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. இது ஆட்டோ மொபைல் சந்தையில் தற்போதுள்ள பல மின்சார இரு சக்கர வாகனங்களைவிட சிறப்பாக செயல்படுகிறது.
சாதாரண சார்ஜிங் தோராயமாக 4-5 மணி நேரத்தில் 0 முதல் 100 சதவிகிதத்தையும், வேகமான சார்ஜிங்கில் சுமார் 1 மணி நேரத்தில் 0 முதல் 80 சதவிகிதத்தையும் எட்டிவிடும்.
விலை என்ன?
பேஸ் மாடல் ரூ.50,000 – 60,000 வரையும், சிட்டி மாடல் ரூ.60,000 – 75,000 வரையும், புரோ மாடல் ரூ.75,000 – 1,00,000 வரையும், ஸ்போர்ட்ஸ் மாடல் ரூ.1,00,000 – 2,00,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக் ஓலா எஸ் 1 புரோ, ஏதர் 450 எக்ஸ் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்படவுள்ளது.

