• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெறும் ரூ.3,000 தான் முதலீடு.. ஆனால் ரூ.6 லட்சம் மாத வருமானம்! கார் டிக்கியில் பிசினஸ் செய்யும் தம்பதியினர்! | From a Car to a Rs.6 Lakh Business: How an Ahmedabad Couple Built a Cold Coco Brand with just Rs.3,000

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வெறும் ரூ.3,000 தான் முதலீடு.. ஆனால் ரூ.6 லட்சம் மாத வருமானம்! கார் டிக்கியில் பிசினஸ் செய்யும் தம்பதியினர்! | From a Car to a Rs.6 Lakh Business: How an Ahmedabad Couple Built a Cold Coco Brand with just Rs.3,000
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெறும் ரூ.3,000 தான் முதலீடு.. ஆனால் ரூ.6 லட்சம் மாத வருமானம்! கார் டிக்கியில் பிசினஸ் செய்யும் தம்பதியினர்!

எத்தனையோ தொழில் புதிதாக வந்தாலும் மக்களின் நாக்கை கட்டி போடும் உணவு வணிகத்திற்கு எப்போதுமே மவுசு உண்டு. பெரிய ரெஸ்டாரன்ட் அமைத்து தான் இதில் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை. தரமாகவும், சுவையாகவும் வழங்கினால் மிகச் சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றியைக் காண முடியும். அப்படித்தான் அகமதாபாத்தைச் சேர்ந்த தம்பதியினர் கோல்ட் கோகோ மற்றும் கோல்டு காஃபி ஆகிய இரண்டே இரண்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதன் மூலம் மாதம் ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.

சாப்ட்வேர் இன்ஜினியரான தர்ஷன் ஜின்சுவாடியா மற்றும் எம்பிஏ பட்டம் பெற்ற அவருடைய மனைவி சுருதி ஜின்சுவாடியா ஆகியோர் 2025-ஆம் ஆண்டு “தி கோகோ ஸ்டேஷன்” என்ற வணிகத்தை தொடங்கினர். இதற்காக ஆரம்பத்தில் அவர்கள் செய்த முதலீடு வெறும் 3000 ரூபாய் மட்டுமே.

வெறும் ரூ.3,000 தான் முதலீடு.. ஆனால் ரூ.6 லட்சம் மாத வருமானம்! கார் டிக்கியில் பிசினஸ் செய்யும் தம்பதியினர்!

ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 18 பாட்டில்கள் வரை விற்பனை செய்துள்ளனர். இதற்கு வருமானமாக 1120 ரூபாய் வரை கிடைத்துள்ளது. ஆனால் நாளடைவில் இவர்களுடைய சுவையான பானங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே.. தற்போது நாளொன்றுக்கு 150 பாட்டில்கள் வரை விற்பனை செய்கின்றனர். இதனால் மாதத்திற்கு ரூ.6 லட்சம் வரை வருமானம் பெற்று வருவதாக தி எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருவரும் வேலை பார்த்துக் கொண்டே பார்ட் டைமாக பிசினஸில் ஈடுபட்டனர். ஆனால் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க சுருதி தனது வேலையை முழுமையாக விட்டு விட்டார். ஆனால் தர்ஷன் சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே தனது மனைவிக்கு துணையாக பிசினஸில் பங்கெடுத்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் காலையிலே குளிர் பானம் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குகின்றனர். அதன் பிறகு உபகரணங்களை எல்லாம் சுத்தம் செய்து தயார் செய்கின்றனர். இதில் சுவாரசியம் என்ன தெரியுமா இவர்களுடைய கடை இயங்கும் விதம்தான். இருவரும் தங்கள் காரின் டிக்கியை பயன்படுத்தி அதில் தான் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக வாடகைக்கு இடமோ அல்லது ஸ்டாலோ போடவில்லை.

இது குறித்து தர்ஷன் பேசுகையில்.. “ஆரம்பத்தில் இது போன்ற தொழிலை செய்யலாமா? என்பதில் எங்களுக்கு சிறிய தயக்கம் இருந்தது. ஆனால் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தொழில் தொடங்கினோம். காலையில் அனைத்து பொருட்களையும் தயார் செய்து விடுவோம். நான் அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்பிய பிறகு 9 மணி வரையில் குளிர்பானங்களை விற்பனை செய்வோம்”, என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்த தம்பதியினர் 30,000 பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளனர். இதனால் ரூ.36 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் கிடைத்துள்ளது. அதுவும் நவராத்திரி பண்டிகையின் போது 9 நாட்களில் 7500 பாட்டில்களுக்கும் அதிகமாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். இப்போது தினசரி வாருமானமாக ரூ.20,000 வரை கிடைக்கிறது. மாதத்திற்கு ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் பெறுகின்றனர்.

மூலப்பொருட்கள், பாட்டில்கள் மற்றும் இதர செலவுகளுக்காக மாதா மாதம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவு செய்கின்றனர். இருந்தாலும் ரூ. 4 லட்சம் வரை மிச்சமாகிறது. தொழில் தொடங்க பெரிய முதலீடுகள் தேவையில்லை. கன்சிஸ்டெண்சி இருந்தால் போதும் என்பதை இவர்களுடைய கதை நிரூபித்துக் காட்டியுள்ளது.

Share This Article

Story first published: Saturday, October 31, 2026, 13:39 [IST]

Other articles published on Oct 31, 2026

Read More

Previous Post

மரம் அறுக்கும் இயந்திரத்தால் மாணவியை கொடூரமாக தாக்கிய இளைஞர்! ஆந்திரா பள்ளியில் என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

`₹114 தினக்கூலி பெற்ற பெண்ணிடம், ₹1,80,692 கோடி சொத்து’ – ஐபோனால் சீனாவின் பணக்காரப் பெண்மணி ஆன கதை! | zhou-qunfei-lens-technology-apple-iphone-china-richest-woman-story

Next Post
`₹114 தினக்கூலி பெற்ற பெண்ணிடம், ₹1,80,692 கோடி சொத்து’ – ஐபோனால் சீனாவின் பணக்காரப் பெண்மணி ஆன கதை! | zhou-qunfei-lens-technology-apple-iphone-china-richest-woman-story

`₹114 தினக்கூலி பெற்ற பெண்ணிடம், ₹1,80,692 கோடி சொத்து' - ஐபோனால் சீனாவின் பணக்காரப் பெண்மணி ஆன கதை! | zhou-qunfei-lens-technology-apple-iphone-china-richest-woman-story

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin