• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘வெறுக்கத்தக்க பேச்சுகளின் மிக மோசமான வடிவம்’ – பிரதமர் மோடியை சரமாரியாக தாக்கிய மன்மோகன் சிங்

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
‘வெறுக்கத்தக்க பேச்சுகளின் மிக மோசமான வடிவம்’ – பிரதமர் மோடியை சரமாரியாக தாக்கிய மன்மோகன் சிங்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்கு 2 தினங்கள் முன்பாக, பிரதமர் மோடிக்கு எதிராக சரமாரி தாக்குதலை தொடுத்துள்ளார் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்.

’நாட்டின் சொத்துக்களில் முஸ்லீம்களுக்கான உரிமை’ குறித்து மன்மோகன் சிங் பேசியதை சர்ச்சையாக்கியதில், நடப்பு மக்களவைத் தேர்தல் பிரச்சார களத்தை பரபரப்பாக்கினார் பிரதமர் மோடி. மன்மோகன் சிங் பேச்சையும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் இணைத்து மோடி முன்னெடுத்த வாதங்கள், வட இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு வரவேற்பு பெற்றுத் பெற்றது; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியது. அப்போதே மன்மோகன் சிங் தனது தரப்பிலான விளக்கத்தை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

சற்றே தாமதமாக மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்கு நெருக்கத்தில், மோடிக்கு எதிராக சரமாரி தாக்குதலை தொடுத்திருக்கிறார் மன்மோகன் சிங். இந்திய மக்களுக்கான கடிதம் என்ற பெயரில் மன்மோகன் சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கை, மோடிக்கு எதிரான அவரின் இதுவரையில்லாத தாக்குதலாக அமைந்துள்ளது. அதிலும் ’கடந்த காலங்களில் எந்த பிரதமரும் பயன்படுத்தாத வெறுப்பூட்டும் பேச்சுக்களை மோடி பயன்படுத்தியதாக’ மோடி மீது மன்மோகன் சிங் பாய்ந்துள்ளார்.

”இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் உரைகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மோடி மிகவும் கொடூரமான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். அவை முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும். பொதுச் சொற்பொழிவின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் மீதான ஈர்ப்பையும் மோடி குறைத்திருக்கிறார்.

சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைத்து, கடந்த காலங்களில் எந்தப் பிரதமரும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, கரடுமுரடான சொற்களைப் பேசியதில்லை. அவர் என்னைப் பற்றி சில தவறான அறிக்கைகளையும் காரணம் காட்டியுள்ளார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்ற சமூகத்தை தனித்து காட்டியதே இல்லை.

இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. கடைசிக்கட்ட வாக்கெடுப்பில், ஒரு சர்வாதிகார ஆட்சியின் தாக்குதல்களில் இருந்து ஜனநாயகம், நாட்டின் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாப்பதற்கான இறுதி வாய்ப்பு நாட்டு மக்களுக்கு உள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பஞ்சாபைக் கேவலப்படுத்துவதில் பாஜக எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லைகளில் மாதக்கணக்கில் போராடினார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக லத்திகளும் ரப்பர் தோட்டாக்களும் போதாது என்பது போல, நாடாளுமன்ற உரைகளிலும் ஒரு பிரதமரே விவசாயிகளை இழிவுபடுத்தினார்.

கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் நினைத்துப் பார்க்க முடியாத கொந்தளிப்பைக் கண்டுள்ளது. பணமதிப்பிழப்பு பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் மத்தியில் தவறான நிர்வாகம் ஆகியவை ஒரு பரிதாபகரமான சூழ்நிலையை விளைவித்துள்ளன.

பாஜக அரசு நமது ஆயுதப்படைகள் மீது தவறான நோக்கத்தில் அக்னிவீரர் திட்டத்தை திணித்தது. மேலும், தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு நான்கு ஆண்டுகள் மட்டுமே என பாஜக நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது” என்று சரமாரி தாக்குதலை மோடி மற்றும் அவரது தலைமையிலான பாஜக ஆட்சிக்கு எதிராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடுத்துள்ளார்.

The post ‘வெறுக்கத்தக்க பேச்சுகளின் மிக மோசமான வடிவம்’ – பிரதமர் மோடியை சரமாரியாக தாக்கிய மன்மோகன் சிங் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

இந்தியாவில் ஒருவரால் இவ்வளவு விவசாய நிலம் தான் வாங்க முடியும்… என்ன காரணம் தெரியுமா?

Next Post

வெள்ளி ஆபரணம் அணிந்தால், எந்த ராசிக்கு அதிஷ்டம் தெரியுமா?

Next Post
வெள்ளி ஆபரணம் அணிந்தால், எந்த ராசிக்கு அதிஷ்டம் தெரியுமா?

வெள்ளி ஆபரணம் அணிந்தால், எந்த ராசிக்கு அதிஷ்டம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin