கோலாலம்பூர் :
மலேசியாவின் நான்கு மாநிலங்களில் நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் அணைகளின் நீர்மட்டச் சரிவைச் சமாளிக்க, வரும் ஏப்ரல் 6 முதல் 9-ஆம் தேதி வரை ‘மேக விதைப்பு’ (Cloud Seeding) மூலம் செயற்கை மழையை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பெர்லிஸ், கெடா, பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள 11 முக்கிய அணைகளை மையமாகக் கொண்டு இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.
தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை (NADMA), மலேசிய அரச விமானப்படை மற்றும் வானிலை ஆய்வுத் துறை ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. இதற்காக சி-130 ஹெர்குலஸ் (C-130 Hercules) ரக விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
பருவமழை மாற்றத்தினால் இந்த வெப்பமான சூழல் மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.




