வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று (03-10-2026) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (04-10-2026) வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பமான வானிலை
இதற்கமைய பகல் வேளையில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொணராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் (Heat Index) எச்சரிக்கை மட்டத்தை (Caution Level) எட்டக்கூடும்.

ஒப்பீட்டு ஈரப்பதம் (Relative humidity) மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கணக்கில்கொண்டு இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்படுவதாகவும் இது மனித உடலுக்கு உணரும் உண்மையான வெப்பநிலையைக் குறிக்கிறது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரிய வெளிச்சத்தில் நீண்ட நேரம் இருப்பது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோர்வை (Fatigue) ஏற்படுத்தும் என்றும் தொடர்ந்து வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபட்டால் தசைப்பிடிப்பு (Heat cramps) ஏற்படக்கூடும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

