நாட்டின் சில மாவட்டங்களில் இன்று (09) வெப்பநிலை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய வடமேற்கு, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ள சில இடங்களில் இந்த வெப்பநிலை அதிகரிப்பு காணப்படுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
இதன்போது மனித உடலால் உணரப்படும் வகையில் வெப்பநிலை அதிகரிப்பு காணப்படுமெனவும், அத்திணைக்களம் தெரிவித்தது.
இந்த வெப்பநிலை தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்திருத்தல், கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல், இளம் வர்ண ஆடைகளை அணிதல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
The post வெப்பநிலை அதிகரிப்பு; மக்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Thinakaran.