வெனிசுலாவுடன் நல்லுறவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் எண்ணெய் வளம் அமெரிக்காவுக்குப் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் மாநிலத்தின் கார்பஸ் கிறிஸ்டி நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுவேலாவின் எண்ணெய்த் துறையில் டெக்சாஸ் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் டீசல் விலை
வெனிசுவேலாவில் எண்ணெய் வளம் அதிகமாகக் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் அந்நாடு அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறக்கூடும் என்றும், அங்கு ஜனாதிபதிக்குப் பதிலாக ஆளுநரைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடத்தப்படலாம் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக உருவெடுத்து வருவதாகத் தெரிவித்த ட்ரம்ப், இதன் மூலம் பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் நுகர்வோருக்குக் கணிசமாகக் குறையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வெனிசுவேலா தொடர்பான நடவடிக்கைகளில் பங்களித்த அமெரிக்க இராணுவ வீரர்களின் சேவையையும் துணிச்சலையும் அவர் பாராட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

