Last Updated:
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய வெளியுறவுத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய வெளியுறவுத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையால் சிறைப்பிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், வெனிசுலாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு விமானப்படை தளத்துக்கு மதுரோ அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்தியில் மதுரோ விமானத்தில் இருந்து கீழிறங்குவது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.
தென்னமெரிக்காவில் நிலவும் பதற்றச்சூழலுக்கு நடுவே நாளை அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட உள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கோரிக்கை காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தியர்கள் வெனிசுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், காரகாசில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


