Fox News செய்தி நிறுவனத்தின் தொலைபேசி நேர்காணலில், இந்த விஷயத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்புமே கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி உள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப், “மதுரோவைச் சிறைப்பிடிக்கும்போது, அவர் ஒரு கோட்டையில் இருந்தார். இந்த ஆபரேஷனில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
இரண்டு பேர் காயமடைந்தனர். ஆனால், அவர்களுமே இப்போது நன்றாக இருக்கின்றனர்” என்று பேசியுள்ளார்.

தற்போது வெளியாகி வரும் தகவலின்படி, வெனிசுலா மீதான தாக்குதலோ, அதிபர் சிறைப்பிடிப்போ சட்டென நடந்த விஷயம் அல்ல. அனைத்தும் பக்காவாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் சிறிய குழு ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே வெனிசுலாவில் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் மதுரோவின் தினசரி நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரிப்போர்ட் செய்து வந்திருக்கிறது.
அடுத்ததாக, மதுரோவின் டியுனா கோட்டை போன்ற செட் ஒன்றை அமைத்து, அவரைக் கைது செய்வதற்கான ஒத்திகைகளைப் பார்த்திருக்கிறது அமெரிக்க ராணுவப்படை.
மதுரோவிற்கு மிக நெருக்கமான நபர் ஒருவர் அமெரிக்காவின் ஆளாம். அவர்தான் ஆபரேஷனின் போது, மதுரோ சரியாக எங்கிருக்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறார்.

