வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வோஷிங்டன் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், கரீபியன் கடலில் அமெரிக்கப் படைகள் மற்றொரு டேங்கரைக் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“மீண்டும் ஒருமுறை, எங்கள் கூட்டு நிறுவனப் படைகள் இன்று(09) காலை ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன: ‘குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் இல்லை’,” என்று அமெரிக்க தெற்கு கட்டளை X இல் கூறியது.
ஒலினா எண்ணெய் டேங்கரை “கைது செய்தனர்”
வெள்ளிக்கிழமை காலை X இடுகையில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து கடற்படையினரும் மாலுமிகளும் ஒலினா எண்ணெய் டேங்கரை “கைது செய்தனர்” என்று கூறியது.

ஒலினா “தடை செய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு டேங்கர் கப்பல்” என்றும், அது “அமெரிக்கப் படைகளைத் தவிர்க்க முயன்று வெனிசுலாவிலிருந்து புறப்பட்ட பிறகு” கைப்பற்றப்பட்டது என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறினார்.
ஒலினா, பல நாடுகளின் தடைகள் பட்டியலில் உள்ளது
உலங்குவானுர்தியில் இருந்து ஒரு கப்பலில் துருப்புக்கள் இறங்குவதைக் காட்டும் ஒரு காணொளியை நோயம் ஒன்லைனில் வெளியிட்டார்.

டேங்கரான ஒலினா, பல நாடுகளின் தடைகள் பட்டியலில் உள்ளது.
சமீபத்திய வாரங்களில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட ஐந்தாவது கப்பல் இதுவாகும்.
கடல்சார் ஆபத்து நிறுவனமான வான்கார்ட் டெக், கரீபியனில் அமெரிக்க கடற்படை முற்றுகையை உடைக்க அந்தக் கப்பல் முயற்சிப்பதாகக் கூறியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

