Last Updated:
மடகாஸ்கரில் அதிபர் பதவி விலகக்கோரி ஜென் இசட் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மடகாஸ்கரில் அதிபர் பதவி விலகக்கோரி ஜென் இசட் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரின் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா சில வாரங்களுக்கு முன்பு தனது ஒட்டுமொத்த அமைச்சரவையில் இருந்தவர்களையும் பதவி நீக்கம் செய்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், முதலில் தண்ணீருக்கும், மின்சாரத்திற்காகவும் போராடியதாகவும், தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மடகாஸ்கரின் தலைநகரான அந்தனானரிவோ பகுதியில் டயர்கள் மற்றும் தடுப்புகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பாதுகாப்புப் படையினர் கலைக்க முயன்றனர். இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ. நா. தெரிவித்துள்ளது. நேபாள நாட்டை அடுத்து மடகாஸ்கரில் ஜென் இசட் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
October 10, 2025 8:58 PM IST


