இஸ்ரேல்-ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில் அது குறித்த முக்கிய தகவல்களை காணலாம்.
1. இஸ்ரேலை குறிவைத்து நூற்றுகணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
2. ஈரான் வீசிய ஏவுகணைகளை இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டான் ஆகிய நாடுகள் தாக்கி அழித்து வரும் சூழலில், பல ஏவுகணைகள் இலக்கை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவருகிறோம் என இஸ்ரேல் ராணுவ தலைமையகம் தகவல் அளித்துள்ளது.
4. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை கூட்ட இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
5. ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
6. இஸ்ரேலினின் அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் அவர்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன.
7. ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. அமைப்பு மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தெரிந்துகொள்ள :
இலக்கை அடைந்த ஏவுகணைகள்… ஈரான் தாக்குதலை சமாளிக்குமா இஸ்ரேல்?
8. முன்னரே ஈரான் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்புக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
9. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 ஈரான் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
10. இந்நிலையில், ஜோ பைடனின் பலவீனமான செயல்பாடே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். ஈரானின் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்ததுடன் இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் உடன் பிரிட்டன் துணை நிற்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
