சிங்கப்பூரில் வீர தீர செயல் புரிந்த தமிழ்நாட்டு ஊழியர்கள் இன்று (ஆக. 3) இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை சந்தித்தனர்.
தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளத்தில் இருந்து ஒரு பெண்ணை மீட்ட ஊழியர்களும், அதே போல ரிவர் வேலி கடைவீடு தீச் சம்பவத்தில் குழந்தைகளை காப்பாற்றிய ஊழியர்களும் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை சந்தித்தனர்.
சிறப்பு நினைவு பரிசு
அதிபருடன் ஊழியர்கள் உரையாடியதாகவும் அதைத் தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிபர் சின்னம் பொறிக்கப்பட்ட சிறப்பு பேனா வழங்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வருகையை நினைவுகூரும் வகையில் இந்த சிறிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சோங் காத்தோங் தொடர்புடைய செய்திகளை தெரிந்துகொள்ள…
திடீர் பள்ளம்: பின்னால் வந்த காரில் பதிவான நேரடி காணொளி!
தமிழ் ஊழியர்கள் 7 பேரும் இஸ்தானாவுக்கு செல்வது உறுதி: அதிபருடன் உரையாட வாய்ப்பு!
ரிவர் வேலி கடைவீடு தீச் சம்பவம் தொடர்பானவை…
பிள்ளைகளை காப்பாற்றிய “தமிழ் ஊழியர்கள்” – பாராட்டி கெளவுரவித்த சிங்கப்பூர்
Photo: Mothership

