Last Updated:
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் கேப்டனாக இருப்பதால், அவர் ‘A’ பிரிவில் அதாவது உயரிய நிலை இடம் பிடிப்பார்.
வீரர்களுக்கான ஒப்பந்த முறையை எளிமைப்படுத்தும் வகையில் ஏ+ பிரிவை நீக்குவதற்கு பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போதுள்ள நான்கு நிலைகளைக் கொண்ட (A+, A, B, C) ஒப்பந்த முறையை மாற்றி, ‘A+’ (ஏ பிளஸ்) பிரிவை முழுமையாக நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இனிமேல் வீரர்கள் A, B மற்றும் C ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.
ஒப்பந்த அமைப்பை எளிமையாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ‘A+’ பிரிவு என்பது பொதுவாக மூன்று பார்மட்களிலும் விளையாடும் வீரர்களுக்காக 2018-ல் உருவாக்கப்பட்டது.
தற்போது மூன்று விதமான போட்டிகளிலும் (Test, ODI, T20) விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இப்போது ஒருநாள் (ODI) போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எனவே, அவர்களைத் தொடர்ந்து உயரிய பிரிவில் வைப்பது கடினம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
இவர்கள் ‘A+’ பிரிவில் இருந்து ‘B’ பிரிவிற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. இதனால் இவர்களது வருடாந்திர ஊதியம் குறையக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ஜஸ்பிரித் பும்ரா மூன்று பார்மட்களிலும் விளையாடுவதால், இவருக்கு ஊதியக் குறைப்பு இருக்காது. ‘A+’ பிரிவு நீக்கப்பட்டாலும், உயரிய பிரிவான ‘A’ பிரிவில் வைக்கப்பட்டு இவருக்கு பழைய ஊதியமான ரூ. 7 கோடி வழங்கப்படலாம்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் கேப்டனாக இருப்பதால், அவர் ‘A’ பிரிவில் அதாவது உயரிய நிலை இடம் பிடிப்பார்.


