• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வீரர்களின் தொடர் காயங்களால் இந்திய அணி நிர்வாகம் கவலை.. பிசிசிஐ எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைகள்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 22, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
வீரர்களின் தொடர் காயங்களால் இந்திய அணி நிர்வாகம் கவலை.. பிசிசிஐ எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைகள்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 22, 2026 4:39 PM IST

2027 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு, வீரர்களின் பணிச்சுமை (Workload) மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்துவதில் பிசிசிஐ தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்திய அணி
இந்திய அணி

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உட்பட பல முக்கிய சர்வதேசக் கிரிக்கெட் தொடர்கள் நெருங்கி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயங்களாலும் உடற்தகுதிப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் உயர்மட்ட மையமான Centre of Excellence (CoE) மையத்தில் வீரர்கள் பலர் முகாமிட்டு சிகிச்சை மற்றும் உடற்தகுதிப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் ஏற்கனவே CoE மையத்தில் இருந்து தீவிர கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்களும் விரைவில் இந்த மையத்தில் இணையவுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்படும் முன், அனைத்து வீரர்களின் உடற்தகுதியும் தீவிரமாகப் பரிசோதிக்கப்படும். வீரர்களின் முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்ற பிறகே, தேர்வுக்குழுவினர் இலங்கை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வார்கள் எனப் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2027 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு, வீரர்களின் பணிச்சுமை (Workload) மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்துவதில் பிசிசிஐ தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கை டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வங்கதேசப் பயணம் மற்றும் நியூசிலாந்து தொடர் என அடுத்தடுத்து தொடர்கள் நடைபெறவுள்ளன.

எனவே, அனைத்து விதமான போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் வகையில் வலுவான மாற்று வீரர்களை கொண்ட அணியை உருவாக்க நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. காயப் பிரச்சனைகள் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

Read More

Previous Post

வாழ்க்கைனா ஏற்ற இறக்கம் இருக்கும் சார்.. ரொம்ப கவலைப்படக் கூடாது.. வைபவ் சூர்யவன்ஷியின் தத்துவம்! | Vaibhav Sooryavanshi: Ups and Downs Are Part of Life, Vaibhav Sooryavanshi Breaks Silence on Benching and Early Setbacks

Next Post

Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! | வணிகம் போட்டோகேலரி

Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin