• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“வீரர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது” – கம்பீரின் வியூகத்தை கடுமையாக சாடிய ஸ்ரீகாந்த்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“வீரர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது” – கம்பீரின் வியூகத்தை கடுமையாக சாடிய ஸ்ரீகாந்த்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Nov 02, 2026 9:25 PM IST

இளம் வீரர்களைக் கையாள்வதில் கம்பீரின் சுழற்சி முறை அணியின் எதிர்காலத்திற்குப் பாதகமாக அமையும் என்ற விமர்சனம் தற்போது வலுப்பெற்று வருகிறது

கவுதம் காம்பீர்
கவுதம் காம்பீர்

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி ஆரம்பத்தில் 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியபோதிலும், கடைசி இரண்டு போட்டிகளில் அடைந்த அடுத்தடுத்த தோல்விகளால் 3-2 என்ற கணக்கிலேயே முடித்தது.

இந்தத் தோல்விகளைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகத்தின் வியூக முடிவுகள் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக, 3-வது டி20 போட்டியில் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்து அசத்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷியை, கடைசி இரண்டு போட்டிகளில் நீக்கிவிட்டு இஷான் கிஷனைச் சேர்த்ததும், தொடர்ச்சியாக வெளியில் சரியாகச் செயல்படாத சஞ்சு சாம்சனைத் தொடக்க வீரராகத் தொடர்ந்து களம் இறக்கியதும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரும், தொடக்க வீரருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அணி நிர்வாகத்தின் இந்த சுழற்சி முறையைத் தனது யூடியூப் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

நியூசிலாந்து சூழலில் தனது திறமையை நிரூபித்த ஒரு இளம் வீரரை ஒரு போட்டியில் ஆடவைத்துவிட்டு அடுத்த போட்டியில் தூக்குவது, வீரர்களிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழலையே (Insecure Atmosphere) உருவாக்கும் என்று கூறிய அவர், நிர்வாகம் செய்வது முட்டாள்தனம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், சஞ்சு சாம்சன் இந்தியாவுக்கு வெளியே விளையாடிய கடைசி 13 போட்டிகளில் ஒரே ஒரு அரைசதத்துடன் 160 ரன்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறி வரும் வேளையில், அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மூன்று தொடக்க வீரர்களையும் சமமாக சுழற்சி முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் வலியுறுத்தினார்.

மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து போன்ற எளிய பந்துவீச்சு கொண்ட அணிகளுக்கு எதிரான தொடர்களில் மற்ற வீரர்கள் தங்கள் ரன்களை உயர்த்திக் கொண்டபோது, சூரியவன்ஷிக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையும் ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டினார்.

அயர்லாந்து தொடரின் போது இந்திய அணிக்கு முதன்முதலில் அழைக்கப்பட்ட சூரியவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான கடினமான போட்டியில் அறிமுகமானார். நியூசிலாந்து தொடரை இந்தியா கைப்பற்றியபோதிலும், இளம் வீரர்களைக் கையாள்வதில் கம்பீரின் சுழற்சி முறை அணியின் எதிர்காலத்திற்குப் பாதகமாக அமையும் என்ற விமர்சனம் தற்போது வலுப்பெற்று வருகிறது.

Read More

Previous Post

“3 கோடி ஊடுருவல்காரர்கள் யார்?” – பாஜகவுக்கு 5 கேள்விகளை முன் வைத்த ப.சிதம்பரம் எம்.பி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

SBI கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு… டிசம்பர் 1 முதல் வரப்போகும் புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
SBI கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு… டிசம்பர் 1 முதல் வரப்போகும் புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

SBI கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு... டிசம்பர் 1 முதல் வரப்போகும் புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin