Last Updated:
இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்வது அதிகரித்துள்ளது. ரேச்சல் கவுர் மலேசியாவில் வேலை செய்து, வீட்டு வாடகை அதிகம் என்பதால் தினமும் 350 கிமீ பயணம் செய்கிறார்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இந்த வாக்கியம் மற்ற நாடுகளுக்கு பொறுத்தமாக இருக்குமோ இல்லையோ, ஆனால் இந்தியாவிற்கு அதிகளவில் தேவைப்டும் வாக்கியம் இருந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களில் இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் ஆண்கள் அதிகமாக இருந்தாலும் தற்போது பெண்களும் சரிக்கு சமமாக பணிக்கு செல்கின்றனர்.
குறிப்பாக வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்லும் பெண்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக வீட்டு வாடகை மிகவும் அதிகமாக இருப்பது அவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதற்கு உதாரணமாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரேச்சல் கவுர் வாழ்க்கையை கூறலாம்.
ரேச்சல் மலேசியாவில் ஏர் ஏசியா நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார். அவரது அலுவலகம் மலேசியாவின் தலைநகர் கோலாலாம்பூரில் உள்ளது. ஆனால், அவர் தனது குடும்பத்துடன் பெனாங்கில் வசித்து வருகிறார். தினமும் தனது குடும்பத்தினருடன் இருக்கவும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் கோலாலாம்பூரில் இருந்து பெனாங்கிற்கு விமானத்தில் பயணிக்கிறார்.
தினமும் 350 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணித்து காலை 5.55 மணிக்கு அலுவலகத்திற்கு செல்லும் ரேச்சல், மாலையில் 8 மணிக்கு வீடு திரும்புகிறார். இவ்வளவு தூரம் பயணிக்க காரணம், கோலாலாம்பூரில் வீட்டு வாடகை மிகவும் அதிகம் என்பதே. அலுவலகம் அருகே வீடு எடுத்தால் 42,000 ரூபாய் வாடகை செலவாகும். ஆனால் விமான பயணத்திற்கு 28,000 ரூபாய்தான் செலவாகிறது என்று ரேச்சல் கூறுகிறார். 12 மற்றும் 11 வயதுடைய தனது இரண்டு குழந்தைகளையும் நேரில் இருந்து கவனித்துக் கொள்ளவும் இதுவே சரியான வழி என ரேச்சல் கருதுகிறார்.
வெளிநாடுகளில் அதிகளவில் சம்பளம் கிடைத்தாலும் அங்கு பொருட்செலவு இந்தியாவை விட அதிகம் உள்ளது. அதிலும் வீட்டு வாடகை, மளிகை பொருட்களின் விலை, மருத்துவ செலவு உள்ளிட்டவை இந்தியாவை விட வெளிநாடுகளில் மிகவும் காஸ்ட்லியாக இருப்பது குறிப்பிடதக்கது.
February 12, 2025 10:07 AM IST
வீட்டு வாடகையை விட விமான பயண செலவு குறைவு… தினமும் விமானத்தில் பணிக்கும் செல்லும் இந்தியாவை சேர்ந்த பெண்


