• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வீட்டு பாடத்தை சரியாக செய்யாத சிறுவன்

GenevaTimes by GenevaTimes
June 6, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
வீட்டு பாடத்தை சரியாக செய்யாத சிறுவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எப்போதுமே சிறு குழந்தைகளுக்கு பள்ளி பாடம் சொல்லி கொடுக்கும் போது பெரும்பாலும் பெற்றோர்கள் பொறுமை இழக்கிறார்கள். பலமுறை விளக்கமாக சொல்லி கொடுத்ததும் கூட குழந்தைக்கு எதுவும் புரியவில்லை என்றால் பல பெற்றோர்கள் மிகவும் கோபமடைகிறார்கள்.

இருப்பினும் பாடம் சொல்லி கொடுக்கும் போது சிறு குழந்தைகளை கோபத்துடன் கையாளும் வழி முற்றிலும் தவறானது இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது. இப்படி ஒரு சம்பவம்- சமீபத்தில் சீனாவில் நடந்துள்ளது. அந்த நாட்டு கல்வி முறைப்படி 3-ஆம் வகுப்பு படிக்கும் மகனுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் போது அந்த சிறு குழந்தையிம் தந்தை கோபமடைந்ததால் அந்த சிறுவனின் முக்கிய உறுப்பு ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

விளம்பரம்

சீனாவின் கிழக்கு மாகாணமான Zhejiang-ல் உள்ள Wenzhou-வை சேர்ந்த Chen என்ற சர்நேம் கொண்ட நபர் ஒருவர், தனது மனைவி அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்த காரணத்தால் மகனுக்கு பள்ளியில் கொடுத்திருந்த வீட்டு பாடங்களில் உதவுவதற்கான பொறுப்பை தற்காலிகமாக ஏற்று கொண்டார். Liangliang என்ற அந்த சிறு மாணவன் கணித பாடத்தில் இருக்கும் ஒரு சிறிய Problem-ற்கான பதிலை புரிந்து கொள்ள முடியாமல் திணறி இருக்கின்றான். சிறுவனின் தந்தை அந்த கணிதத்திற்கான பதிலை புரிய வைக்க பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் இறுதிவரை அந்த சிறுவனால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.

விளம்பரம்

இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிறுவன் Liangliang-ன் தந்தை, அருகில் வைக்கப்பட்டிருந்த பழக்கூடையில் இருந்த மாதுளை ஒன்றை எடுத்து மிகவும் கோபமாக அவன் மீது வீசி தாக்கி இருக்கிறார். அந்த மாதுளை நேரடியாக அந்த சிறுவனின் மார்புக்கு கீழே வயிற்று பகுதியை தாக்கியது. இதனில் சிறுவன் வலி தாங்காமல் கதறி அழுதிருக்கிறான். தான் அடித்ததால் தான் அழுகிறான் என்று நினைத்து அவன் தந்தை பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் வரை குழந்தை Liangliang வலியில் முனகிக்கொண்டே இருந்ததால் பிரச்சனை அதிகரித்தது. இதனை தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அளித்து சென்று அவனை பரிசோதித்த போது தான் அந்த அதிர்ச்சி தகவல் தெரிந்தது.

விளம்பரம்

இதையும் படிங்க: 
காதல் மனைவி பற்றிய உண்மை.. 12 நாட்களுக்கு பிறகு கணவனுக்கு தெரிய வந்த அதிர்ச்சி தகவல்

தந்தை வேகமாக விட்டெறிந்து மாதுளையால் தாக்கியதில் அந்த சிறுவனின் மண்ணீரல் வெடித்து சிதைந்தது பரிசோதனையில் தெரியவந்தது. மண்ணீரல் சில நேரங்களில் மிக எளிதாக வெடித்து விடுவதாகவும், சில சமயங்களில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் கூறியுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மண்ணீரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். சிறுவனுக்கு உடனடியாக மண்ணீரலை அகற்ற சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

விளம்பரம்

இதனிடையே இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தந்தை தனது மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார்! மண்ணீரலை அகற்றுவது மீள முடியாத சேதம். தான் குழந்தையாக இருந்தால் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று பலரும் ஆவேசத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சீனாவில் கவனக்குறைவால் பெரும் சேதம் அல்லது லாடும் காயம் ஏற்படுத்தினால் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆனால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வழக்கு கைவிடப்படும்.

விளம்பரம்

Follow @ Google News:
கூகுள் செய்திகள்
பக்கத்தில்
நியூஸ்18 தமிழ்
இணையதளத்தை
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே சட்டத்தின் முன் அனைவரும் சமம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான உறவைப் பொருட்படுத்தாமல், குடும்ப வன்முறை தடை செய்யப்பட்டுள்ளது என்று Sichuan Hongqi சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் He Bo குறிப்பிட்டுள்ளார். சீனாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கற்பிப்பது வழக்கம். 2020 ஆம் ஆண்டில் பிரைமரி ஒன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வாரத்திற்கு சராசரியாக 7.19 மணிநேரம் வீட்டுப்பாடம் கற்பிப்பதாக சீன குடும்பக் கண்காணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

4 நாள் கிரிக்கெட் முட்டாள்தனமானது… யாரும் விரும்ப மாட்டார்கள் – – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

மனிதவளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு இல்லை, ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் முக்கிய சொத்து – Malaysiakini

Next Post
மனிதவளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு இல்லை, ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் முக்கிய சொத்து – Malaysiakini

மனிதவளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு இல்லை, ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் முக்கிய சொத்து – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin