• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை செலுத்த தவறினால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை செலுத்த தவறினால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 15, 2025 2:23 PM IST

இஎம்ஐ தொகையை செலுத்தாமல் தவறவிடும் பட்சத்தில், அந்த தொகை எங்கும் மறைந்துவிடாது. அது அடுத்த மாத தவணையில் சேர்கிறது.

Rapid Read
News18
News18

ஒருவரது வாழ்க்கையில் எப்போது, எது நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது. சில நேரங்களில் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால் வருமானத்தை சரியாக திட்டமிடாத காரணத்தினால் அதிக பணம் செலவாகியிருக்கும். இதுபோன்ற காரணங்களால் நீங்கள் வாங்கிய வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ தொகையை செலுத்த முடியாமல் போகும் வாய்ப்புள்ளது. ஒரு மாதம் இஎம்ஐ செலுத்த தவறும்பட்சத்தில் உடனேயே உங்கள் வீட்டை வங்கிகள் ஜப்தி செய்யாது என்றாலும், பல வழிகளில் இது உங்களுக்கு சங்கடத்தைத் தரும் விஷயமாக மாறலாம்.

தாமதமாக செலுத்தியதற்கான அபராதம்

உங்களுக்கு வரும் முதல் சங்கடம், தாமதமாக செலுத்தியதற்கான அபராதம். நீங்கள் ஒரு சில நாட்கள் தாமதமாகச் செலுத்தினாலும் கூட, வங்கிகள் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த அபராதத் தொகை சிறியதாகத் தோன்றினாலும், வேறு எதற்காவது பயன்படுத்தக்கூடிய தொகை இப்படி வீணாக செலவாகும். மேலும் வங்கிகள் உங்களின் கிரெடிட் ஸ்கோரில் கை வைப்பார்கள் என்பதையும் நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கிரெடிட் ஸ்கோரில் ஏற்படும் தாக்கம்

நீங்கள் செய்யக்கூடிய சிறிய தவறு இங்குதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நீங்கள் செலுத்தாமல் தவறவிட்ட இஎம்ஐ உடனடியாக கடன் நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும். ஒரு முறை தவறவிட்டாலும் கூட உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையக்கூடும். மேலும் மீண்டும் மீண்டும் தாமதமாக செலுத்தினால், அதிகமாக குறையும். பெரும்பாலும் வீட்டுக் கடன்கள் பெரிய தொகை என்பதோடு நீண்ட கால கடன்கள் என்பதால், கடன் வழங்குபவர்கள் எந்தவொரு தவணைத் தவறுதலையும் எச்சரிக்கையாகக் கருதுகிறார்கள். ஆகவே மற்றொரு கடனையோ அல்லது புதிய கிரெடிட் கார்டு வாங்குவதையோ இது கடினமாக்குகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் செலவுகள்

இஎம்ஐ தொகையை செலுத்தாமல் தவறவிடும் பட்சத்தில், அந்த தொகை எங்கும் மறைந்துவிடாது. அது அடுத்த மாத தவணையில் சேர்கிறது. மேலும் அதற்கான வட்டியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காலப்போக்கில் இந்தக் கூடுதல் சுமை நீங்கள் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை அதிகமாக்கி, நீங்கள் கடன் வாங்கிய போது இருந்ததை விட அதிக விலை கொண்டதாக மாற்றும்.

ஒரு இஎம்ஐ தாமதமாக செலுத்தினால் என்ன ஆகும்?

வங்கிகள் பொறுமையை கடைபிடிக்கும். ஆனால் தொடர்ச்சியாக மூன்று இஎம்ஐ-களை செலுத்தாமல் இருந்தால், உங்கள் கடன் செயல்படாத சொத்தாக வகைப்படுத்தப்படலாம். அப்போதுதான் வீட்டை ஜப்தி செய்யக்கோரும் நோட்டீஸ் உங்கள் வீட்டுக்கு வரும். அதன்பிறகும் ஒழுங்காக செலுத்தவில்லை என்றால், நிலுவைத் தொகையை வசூலிக்க சொத்தை விற்க வங்கிக்கு உரிமை உண்டு.

நீங்கள் ஒரு முறை இஎம்ஐ செலுத்த தவறிவிட்டால் கடன் வழங்குபவர்கள் உங்களை எதுவும் செய்வதில்லை. இந்த மாதம் உங்களால் தாமதமாக தான் செலுத்த முடியும் என முன்பே தெரிந்தால், இந்த விவரங்களை வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள். இப்படி வெளிப்படையாக இருப்பது பெரும்பாலும் உங்களுக்கு உதவிகரமாகவே இருக்கும். மேலும் கடன் வழங்குபவருடனான உங்கள் உறவை இது மோசமாகாமல் தடுக்கிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 15, 2025 2:23 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை செலுத்த தவறினால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Read More

Previous Post

இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவாரா? | விளையாட்டு

Next Post

மாசடைந்த மருந்து காரணமாக தாய்லாந்து நிறுவனம் 2 லட்சம் புட்டிகளை திரும்பப் பெறுகிறது | Makkal Osai

Next Post
மாசடைந்த மருந்து காரணமாக தாய்லாந்து நிறுவனம் 2 லட்சம் புட்டிகளை திரும்பப் பெறுகிறது | Makkal Osai

மாசடைந்த மருந்து காரணமாக தாய்லாந்து நிறுவனம் 2 லட்சம் புட்டிகளை திரும்பப் பெறுகிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin