லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வீட்டுப்பாடம் எழுதாத மாணவரின் பல்லை உடைத்து கடுமையாகத் தாக்கியதில் மாணவர் மயக்கமடைந்துள்ளார். ரேபரேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு முன்பு வீட்டுப்பாடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிஃப், பள்ளியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக சக மாணவர்கள் பள்ளி முதல்வரிடம் தெரிவிக்க மயக்கமடைந்த மாணவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ஆசிஃபை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த மாணவர் ஒரு நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


