ரெப்போ இணைக்கப்பட்ட வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து அனைத்து கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதங்களானது அதிக அளவு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரபலமான சில லோன் ப்ராடக்டுகளுக்கான வட்டி விகிதங்கள் பின்வருமாறு:
வீட்டுக் கடன்: இப்போது ஒரு ஆண்டுக்கு 7.90% முதல் கிடைக்கும். வாகனக் கடன்: தற்போது 8.20 சதவீதத்தில் இருந்து கிடைக்கும்.
மாற்றப்பட்டுள்ள இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 12, 2025 முதல் இருந்து அமலாகும். மேலும், இதன் மூலமாக கனரா வங்கியில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடிப் பலன்கள் கிடைக்கும் என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் மற்றும் புதிய கடன் பெறுநர்கள் ஆகிய இருவருக்குமே மாத தவணைத் தொகை (EMI) குறைந்துள்ளது. எனவே, வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கு திட்டமிடும் வாடிக்கையாளர்கள் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு அறிக்கையில் கனரா வங்கி கூறியுள்ளது.
இதையும் படிக்க: வங்கிக் கடன் vs தனியார் நிறுவன கடன்: இரண்டில் எது பெஸ்ட் சாய்ஸா இருக்கும்னு நினைக்கிறீங்க…?
“பாலிசி விகிதங்கள் குறைக்கப்படும்போது, அதனை வட்டி விகிதங்களில் நேரடியாக செலுத்தி, அவற்றை குறைப்பதன் மூலமாக கனரா வங்கி தொடர்ந்து வாடிக்கையாளர்களின் தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் மிக எளிதாக கடன் வாங்கலாம் மற்றும் தங்களுடைய கனவுகள் மற்றும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு வங்கி பெருமளவு உதவி வருகிறது” என்று கனரா வங்கி கூறியுள்ளது.
வீட்டுக் கடன் மற்றும் ஆட்டோ கடன் பெறுநர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக விளங்குகிறது. இரண்டாவது முறையாக இந்த மாதத்தின் துவக்கத்தில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இனி 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் சுயமாக பேங்க் அக்கவுன்ட்டை இயக்கலாம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட RBI…!
மத்திய வங்கியில் சக்திகாந்த தாசுக்கு அடுத்து புதிய RBI கவர்னராக பங்கேற்ற சஞ்சய் மல்ஹோத்ராவின் இரண்டாவது மானிட்டரி பாலிசி இது. 6 நபர்கள் கொண்ட மானிட்டரி பாலிசி குழுவின் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை அன்று துவங்கியது. அதில் ரெப்போ விகிதங்களை 25 பேசிஸ் புள்ளிகள் குறைத்து, 6 சதவீதமாக குறைப்பதாக முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. மானிட்டரி பாலிசி கமிட்டி பாலிசி விகிதங்களை 25 பேசிஸ் புள்ளிகள் குறைத்து 6.25% ஆக்க முடிவு செய்து இருக்கிறோம் என்று RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 27, 2025 2:37 PM IST
வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு… கனரா வங்கி வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

