நம்மில் பலரும் ஆடம்பரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ விரும்புகின்றனர். ஆனால் அவை அந்த நபரின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப தான் சாத்தியமாகிறது. முன்பெல்லாம் அரசர்கள் மாளிகைகள், கோட்டைகைகளை கட்டி ஆடம்பரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர். ஆனால் இப்போது அதெல்லாம் அசாத்தியமான ஒன்றாக உள்ளது. காரணம் விண்ணை முட்டும் விலைவாசியில் ஒரு கோட்டையை வாங்குவது மிகவும் கடினமான ஒன்றாகும்.
ஆனால் இங்கிலாந்தில் ஒரு கோட்டை, வீட்டின் விலைக்கே விற்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் இங்கிலாந்தில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு கோட்டை வீட்டின் விலைக்கு விற்கப்படுகிறது. இது ஒரு ஆடம்பர பங்களாவை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் கோட்டையில் வாழ முடியும் என்ற நிலை உள்ள நிலையில், சாமானியரும் கோட்டையில் வாழ இது வழி வகுத்துள்ளது.
இந்த கோட்டையின் ஆரம்ப விலை 5,00,000 பவுண்டுகளாக இருந்தது அதாவது இந்திய மதிப்பில் ரூ.5 கோடியே 22 லட்சம் ஆகும். கோட்டை விற்பனைக்கு அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில், யாரும் வாங்க வராததால் 4,50,000 பவுண்டுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,70,52,504 ஆகும். ஆனால் விலை குறைக்கப்பட்ட பிறகும் யாரும் கோட்டையை வாங்க முன்வரவில்லை.
இந்த மாபெரும் வரலாற்று சொத்தை குறைந்த விலையில் விற்பனை செய்தும் ஏன் யாரும் வாங்க வரவில்லை. உண்மையில் பிரச்னை என்னவென்றால் இந்த கோட்டை சுமார் 956 ஆண்டுகள் பழமையானது என்பதால் ஆங்கில பாரம்பரியமாக விளங்குகிறது. சட்டத்தின்படி, மாநில செயலாளரின் பாதுகாப்பில் உள்ள அனைத்து சொத்துக்களும் பொதுவில் வைக்கப்படும். கோட்டையை வாங்க யாரும் தயாராக இல்லாததற்கு காரணம் இதுதான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…