பிரேசில்:
பிரேசிலின் பிரபல நடிகரும் முன்னணி டப்பிங் கலைஞருமான டோனி ஜெர்மனோ (55) திடீர் விபத்தில் உயிரிழந்த செய்தி உலகளாவிய ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 26 அன்று அவரது வீட்டில் புனரமைப்பு பணிகள் நடந்துகொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பணிகளை கவனிக்க வீட்டின் கூரைக்கு சென்ற ஜெர்மனோ, துரதிர்ஷ்டவசமாக கூரையிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனால் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பல மணி நேர சிகிச்சைக்குப் பிறகும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டோனி ஜெர்மனோ, பல பிரபல தொடர்களுக்கும் மற்றும் திரைப்படங்களுக்கும் குரல் கொடுத்து வந்தவர். குறிப்பாக: Beauty and the Beast, Nicky, Ricky, Dicky & Dawn, The Muppets, போன்ற மிக பிரபலமான தொடர்கள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு அவர் வழங்கிய குரல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது இயல்பான, சிறப்பான குரல் நடிப்பு காரணமாக, டப்பிங் உலகில் தனித்துவமான இடத்தை பிடித்திருந்தார்.
அவரது திடீர் மரணம் பிரேசில் பொழுதுபோக்கு துறைக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.




